முகப்பு |
மெல்லிய இனிய |
306. நெய்தல் |
'மெல்லிய, இனிய, மேவரு தகுந, |
||
இவை மொழியாம்' எனச் சொல்லினும், அவை நீ, |
||
மறத்தியோ வாழி-என் நெஞ்சே!-பல உடன் |
||
காமர் மாஅத்துத் தாது அமர் பூவின் |
||
வண்டு வீழ்பு அயரும் கானல்- |
||
தெண் கடல் சேர்ப்பனைக் கண்ட பின்னே? | உரை | |
காப்பு மிகுதியான், நெஞ்சு மிக்கது வாய் சோர்ந்து, கிழத்தி உரைத்தது. - அம்மூவன் |