கடவுள் வாழ்த்து
|
1நீல மேனி வாலிழை பாகத்
தொருவ னிருதா ணிழற்கீழ்
மூவகை யுலகு முகிழ்த்தன முறையே.
|
வாழ்த்து.
பாரதம் பாடிய பெருந்தேவனார்.
|
குறிப்பு. வாலிழை -தூய அணிகலங்களையுடைய உமாதேவியார், ஒருவன்- சிவபெருமான்,
முகிழ்த்தன-தோன்றின.
|
(மேற்கோளாட்சி) ‘ஆசிரியப்பா
மூன்றடியான் வந்தது’
(தொல்,
செய், 157, பேர். ந.)
|
(பிரதி பேதம்) 1 ‘மா அமேனி, ‘ ‘ மாமலர் மேனி ‘
|
|