| அயர - ஆட | 6-40 |
| " - விரும்ப | 6-39 |
| அயர்பு - செய்தலால் | 2-33 |
| அயிலம்பு - கூரிய அம்பு | 18-30 |
| அரங்கு - கூத்தாடுகளம் | 16-13 |
| அரணம் - காவல் | 4-73 |
| அரத்தின்வாய் - அரத்தாற் கூர்மை செய்யப்பட்ட வாய் |
10-98 |
| அரமகள் - தெய்வப்பெண் | 10-78 |
| அரவிந்தம் - தாமரை | 12-78 |
| அரவு - பாம்பு | 3-59 |
| அரவுரி - பாம்புச் சட்டை | 21-6 |
| அரற்றெடுப்ப - அரற்ற | 11-113 |
| அரி - நெல்லரிந்த குவை | 7-27 |
| அரி - வண்டு | 10-97 |
| அரி - வரி | 16-10 |
| அரிகுரல் - அரித்த ஓசை | 17-19 |
| அரிது - இல்லை | 2-34 |
| அரிது - செயற்கரிய செயல் | 5-33 |
| அரியள் - அருமையுடையோள் | 8-60 |
| அரிவை - பெண் | 7-17 |
| அரிவை - வையை மகள் | 11-28 |
| அரிவையர் - மகளிர் | 8-120 |
| அருகு - அண்மையில் | 6-75 |
| அருச்சிப்போர் - அருச்சனை செய்வோர் | 8-108 |
| அருஞ்சனை - நிலைத்தலில்லாத சுனை | 9-62 |
| அருப்பம் - திண்மை | 10-56 |
| அருமறை - வேதம் | 1-14 |
| அருவி - உருவமற்ற | 6-72 |
| அருளி - அருள் செய்து | 8-65 |
| அருளில் அணங்கு - அருளில்லாத தெய்வம் | 8-66 |
| அருள்முருகு - அருளுடைய முருகன் | 8-65 |
| அருள் வயினால் - அருட்கூற்றினால் | 8-88 |
| அரை - அடிமரம் | 17-3 |
| அரைக்குநர் - அரைப்பவர் | 10-84 |
| அல - கலப்பையையுடையோய் | 3-83 |
| அலர் - பழிச்சொல் | 10-65 |
| அலர் - மலர் | 2-53 |
| அலர்தரு பக்கம் - வளர்பிறைப் பகுதி | 11-31 |
| அல்கல் - தங்குதல் | 6-54 |
| அல்கி - தங்கி | 9-32 |
| அல்லல் - துன்பம் | 5-57 |
| அல்லல் - பசி முதலிய துன்பங்கள் | 10-3 |
| அல்லா - அல்லாந்து; மயங்கி | 6-19 |
| அல்லாநெஞ்சம் - அல்லாப்பையுடைய மனம் | 6-99 |
| அல்லாந்து - மயங்கி | 12-71 |
| அல்லி - தாமரை | 1-35 |
| அவி - கடவுட் கிடும்பலி | 5-40; 6-11 |
| அவிந்த - ஓய்ந்த | 4-6 |
| அவியமர் அழல் - அவியிடப்பட்ட வேள்வித் தீ |
10-84 |
| அவியாவிளக்கம் - அணையாத விளக்கு | 8-98 |
| அவிர் - விளங்கும் | 2-51 |
| அவிழ் - மலர்ந்த | 8-1 |
| அவிழ் - விரிந்த | 3-55 |
| அவிழ்ந்தமலர் - மலர்ந்தமலர் | 7-24 |
| அவுணர் - அசுரர் | 3-56 |
| அவ்வரை - அக் கிரௌஞ்சமலை | 19-103 |
| அவ்வவை - அவ்வவ்விடத்தே | 4-69 |
| அவ்வும் - அவையும் | 2-58; 4-33 |
| அவ் வேள் - அம் முருகன் | 9-36 |
| அழல் - வெதும்ப | 5-26 |
| அழலம்பு - தீக்கணை | 5-25 |
| அழல் - தீ | 2-52 |
| அழல்புரை - தீயையொத்த | 4-66 |
| அழி - மிகுதி | 10-1; 20-5 |
| அழிதவம் - கூடாவொழுக்கத்தால் அழிந்ததவம் | 5-75 |
| அழிந்து - மனம் வருந்தி | 6-43 |
| அழிபு - அழிந்து | 2-40; 7-3 |
| அழுங்கல் - ஆரவாரம் | 12-100 |
| அழுவம் - கடற்பரப்பு | 18-3 |
| அளப்பரியவை - அளத்தற்கரியை | 4-61 |
| அளவா - அளக்கவியலாத | 10-7 |
| அளறு - சேறு | 2-47; 6-18; 8-93 |
| அளறு - மணச்சாந்து | 10-73 |
| அளி - அருள் | 1-38; 3-67 |
| அளி - வண்டு | 10-118 |
| அளிது - அளிக்கத்தக்கது | 8-64 |
| அறநீக்கி - துவரக்கெடுத்து | 4-1 |
| அறம் - கற்பு (ப.தி) | 2-48 |