| ஒள்ளிழை - ஒளியையுடைய அணிகலன் | 7-36 |
| " - வள்ளி | 9-39 |
| ஒன்பதிற்றிருக்கை - ஒன்பது நாள்களின் இருப்பிடம் | 11-3 |
| ஒன்றனூழி - வானந்தோன்றிய முதலூழி | 2-6 |
| ஒன்றா - ஒன்றாக - முதலாக | 4-41 |
| ஒன்றாற்றுப்படுத்த - ஒருவழியிற் செலுத்திய | 4-2 |
| ஒன்றியும் - மனமியைந்தும் | 10-62 |
| ஒன்றின்று - ஒன்றுதலில்லை | 4-41 |
| ஒன்று - ஆகாயத்தின் பண்பாகிய ஓசை |
3-77; 13-18 |
| ஒன்றுபு - பொருந்தி | 1-63 |
| ஒன்னார் - பகைவர் |
2-50; 7-49 |
| ஓங்குயர் - மிகவுயர்ந்த | 2-27 |
| ஓசனை - யோசனை | 12-25 |
| ஓச்சி - வீசி | 9-45 |
| ஓசை - முகபடாம் | 18-27 |
| ஓதம் - வெள்ளம் | 7-29 |
| ஓயற்க - மாறாது நிலைபெறுக | 10-128 |
| ஓரொத்து - ஒரு தன்மையாகப் பொருந்தி |
9-15; 20-65 |
| ஓர்சொல் - ஒப்பில்லாத புகழ் | 9-75 |
| ஓர்மின் - கேண்மின் | 11-127 |
| ஓவம் - சித்திரம் | 21-28 |
| ஓவா - ஒழியாத | 2-70 |
| கங்கை - ஒரு யாறு | 16-36 |
| கடந்து - வென்று | 1-26 |
| கடம்படுவோர் - பொருள்களை நேர்வோர் | 8-106 |
| கடம்பமர் செல்வன் - முருகக் கடவுள் | 8-126 |
| கடம்பு - செங்கடப்பமரம் | 4-67 |
| கடவுவோர் - செலுத்துவோர் | 12-28 |
| கடவுளவை - கடவுட்டன்மையையுடையை | 4-63 |
| கடவுள் ஒருமீன் - அருந்ததி | 5-44 |
| கடி - சிறப்பு | 12-100 |
| " - மணம் | 12-88 |
| கடிகுவேம் - விலக்குவேம் | 20-92 |
| கடிநகர் - கோயில் | 8-126 |
| கடிமரம் - பூசனைக்குரிய கடப்ப மரம் | 17-3 |
| கடுஞ்சூர்மா - கொடிய சூரபதுமன் | 9-70 |
| கடுநவை - கொடிய துன்பம் | 4-49 |
| கடுப்பும் - வெகுளியும் | 4-49 |
| கடுமா - யானை | 12-28 |
| கடும்பு - சுற்றத்தார் | 2-75 |
| கடும்புனல் - கடுகிப்பாயுநீர் | 11-107 |
| கடை - எல்லை | 11-46 |
| " - பின் | 11-9 |
| கடைமுறை - இறுதிக்காலம் | 3-71 |
| கணக்கு - கணத்திற்கு | 19-39 |
| கணவிரி - செவ்வலரி | 11-20 |
| கண் - துளை | 17-11 |
| கண்டக்கரும்பு - கரும்புத்துண்டு | 19-34 |
| கண்டல் - தாழைமலர்: ஆகுபெயர் | 10-101 |
| கண்டீ - பாராய் | 6-64 |
| கண்ணடி - கண்ணாடி | 12-20 |
| கண்ணாது - நினையாமல் (ப.தி) | 4-2 |
| கண்ணாருஞ்செயல் - கண்ணிறைந்த அழகு | 11-54 |
| கண்ணி - தலையிற்சூடுமாலை | 7-45 |
| கண்ணியல் - கண்ணழகு | 7-65 |
| கண்ணியை - தலைமாலையினையுடையை | 4-58 |
| கண்ணை - கண்ணையுடையை | 1-6 |
| கதழும் - விரையும் | 9-5 |
| கதழ் - விரைவு | 14-1 |
| கதழ்பு - மொய்த்து | 10-18 |
| கதியிற்று - தன்மைத்து | 8-18 |
| கதுப்பு - கபோலம் | 10-30 |
| " - கூந்தல் | 10-120 |
| கதுவாய் - பற்றிக்கொள்வாய் | 20-82 |
| கபிலர் - உருத்திரர் | 3-7 |
| கமம் - நிறைந்த | 18-2 |
| கமலம் - ஒருபேரெண் | 2-14 |
| கமழ்முகை - மணக்கும் அரும்பு | 8-74 |
| கம்பலை - ஆரவாரம் | 8-111 |
| கம்பலைத்தன்று - முழக்கிற்று | 8-37 |
| கயமலர் - குளத்திற் பூ | 8-114 |
| கயமா - யானை குதிரை | 20-19 |
| கயம் - குளம் | 7-23 |
| " - மென்மை | 9-50 |
| கயவாய் - குளத்தின்கண்ணுள்ள | 8-74 |