| கயில் - கோக்குவாய் | 2-18 |
| கரந்து - மறைத்து | 7-21 |
| கரப்பார் - ஒளிப்பவர் | 10-68 |
| கரு - கருப்பம் | 5-36 |
| கரு - கருப்பம் | 8-106 |
| கரு - பரமாணு | 2-5 |
| கருங்கண் வெள்ளை - சங்கருடணன் | 3-80 |
| கருமுகக் கணக்கு - கரிய முகமுடைய குரங்குத் திரளுக்கு | 19-39 |
| கரும்பின் - தொய்யிற் கரும்பினையுடைய | 7-55 |
| கருவல் கந்தம் - கரிய வலிய கழுத்து | 4-22 |
| கருவியர் - நீராடற்கருவிகளையுடையோர் | 6-31 |
| கருவி - தொகுதி | 13-10 |
| கரைச்சிறை - கரையாகிய அரண் | 6-23 |
| கரைபு - இசை | 17-11 |
| கரைபு - முழங்கி | 16-16 |
| கரையா - சொல்லி | 9-35 |
| கலங்கினர்: முற்றெச்சம் | 6-45 |
| கலந்த - பகுத்துக் கொடுத்த | 3-34 |
| கலம் - மரக்கலம் | 10-54 |
| கலவாது - அணியாது | 20-19 |
| கலி - துன்பம் | 2-74 |
| கலி - முழங்கும் | 6-33 |
| கலித்த - தழைத்த | 14-13 |
| கலிழ் - கலங்கல் | 6-44 |
| கலிழ்கடல் - புடைபெயருங்கடல் | 8-31 |
| கலிழ்பு - கலங்கி | 6-16 |
| கல் - மணி | 3-64 |
| கல் - மலை | 11-39 |
| கல்லகாரம் - குளிரிப்பூ | 11-103 |
| கல்லறை - கல்லென்று ஒலிக்கும் | 15-11 |
| கவழம் - கவளம் | 19-34 |
| கவிதை - கவித்தன்மை | 6-8 |
| கவிழ்ந்த - பாய்ந்த | 7-23 |
| கவினி - அழகுற்று | 16-33 |
| கவின் - அழகு | 12-51 |
| கவுதமன் - ஓர் இருடி | 19-51 |
| கவைஇய - அகத்திடப்பட்ட | 2-29 |
| கவைநா - பிளவுபட்ட நாக்கு | 13-28 |
| கழங்கு - ஒரு விளையாட்டுக் கருவி (கழற்சிக் காயுமாம்) | 10-107 |
| கழறும் - முழங்கும் | 2-37 |
| கழனி - வயல் | 7-34 |
| கழி - மூங்கிற்கழி | 11-54 |
| கழீஇயின்று - கழுவிற்று | 20-5 |
| கழிப்பிய - கழிந்த | 2-15 |
| கழிய - மிக | 10-96 |
| கழுநீர் - ஒரு நீர்ப்பூ | 7-23 |
| " - செங்கழுநீர் | 12-78 |
| களவு - வஞ்சகம் | 6-65 |
| களி - களிப்பு | 10-63 |
| களிதூங்க - மகிழ்ச்சிமிக | 7-16 |
| களிநாள் - களியாட்ட நாள் | 16-13 |
| களிறு - பன்றி | 2-33 |
| களிற்றியல் - ஆண்யானையின் தன்மை | 9-50 |
| களைந்த - அகற்றிய | 3-16 |
| களையல் - நீக்குதல் | 10-52 |
| கள் - தேன் | 15-54 |
| கள்வன் - களவுசெய்தவன் | 20-36 |
| கள்வி - களவுசெய்தவள் | 20-82 |
| கள்ளின்களி - கள்ளுண்டமையாலுண்டாகும் வெறி | 10-65 |
| கறி - மிளகுப்பொடி | 16-2 |
| கற்பு - கற்பொழுக்கம் | 9-16 |
| கனலி - ஞாயிறு | 1-42 |
| கனல்பொரு - தீ சுட்ட | 10-72 |
| கனவன்று - கனவுமில்லை | 8-77 |
| கனற்றுபு - கனலச்செய்து | 6-86 |
| கனைக்கும் - முழங்கும் | 11-74 |
| கனைந்து - மிக்கு | 10-63 |
| கன்றிடின் - முதிருமாயின் | 6-98 |
| கன்னிமை - கன்னித்தன்மை | 11-136 |
| கா - சோலை | 9-34 |
| கா - பொழில் | 10-72 |
| காஅய் கடவுள் - அழிக்குங் கடவுள்; சிவன் | 5-13 |
| காக்கை - காத்தல் | 20-87 |
| காஞ்சி - ஒருவகை அணிகலன் | 7-47 |
| காணிய - கண்டு | 10-46 |
| காண்டை - காண்பாய் | 8-85 |
| காண்பு - காண்டல் | 13-28 |
| காதற்காமம் - அன்புடைய காமம் | 9-14 |
| காத்தி - பரிகரி | 6-86 |