"முகந்தானே, கொட்டிக் கொடுக்குங் குறிப்பு’’. -கலி. 95. என்பவை முதலியவற்றால் உணரலாகும். இவர், தாம் கூறும் பொருளைக் கேட்போர் அதனைக் கண்டோர்போல இன்புறும்படி தன்மையை நவிலுதலில் மிக்க திறமுடையவர்; இதனை
"மையற விளங்கிய மணிமரு ளவ்வாய்தன் மெய்பெறா மழலையின் விளங்குபூ ணனைத்தரப் பொலம்பிறை யுட்டாழ்ந்த புனைவினை யுருள்கலன் நலம்பெறு கமழ்சென்னி நகையொடு துயல்வர உருவெஞ்சா திடைகாட்டு முடைகழ லந்துகில் அரிபொலி கிண்கிணி யார்ப்போவா வடிதட்பப் பாலோ டலர்ந்த முலைமறந்து முற்றத்துக் கால்வறேர் கையி னியக்கி நடைபயிற்றா ஆலமர் செல்வ னணிசால் பெருவிறல் போல வருமென் னுயிர்’’. என்பது முதலியவை புலப்படுத்தும். | இவர் நுண்ணுணர்வுடையவர் ஒர்த்து இன்புறத் தக்க உள்ளுறை யுவமை கூறுதலில் வல்லவரென்பதை (66, 69, 78) ஆம் பாடல்களால் அறியலாம். மேலும் பிறர் கூறாதனவும் வியக்கத்தக்கனவுமான உவமைகளைப் பற்பல இடத்து மிக்க பொருத்த முடையவனவாக இசைத்திருகிறார். இதனை அடியிற் குறிக்கும் பாடற் பகுதிகளிற் காண்க. (68) 24 - 25. (70) 20 - 21. (71) 24 - 26. (72) 1 - 8. (73) 1 - 5. (74) 8 - 9. (78) 15 - 16, 19 - 21, 25 - 26. (81) 25 - 27. (82) 26 - 27. (83) 26 - 31. (84) 10 - 11, 38. (86) 32 - 34. (88) 10 - 11. (89) 4 - 5, 8 - 9. (92) 27 - 29. (96) 22 - 24, 27 - 29. (98) 1 - 3. (99) 4 - 5, 18 - 21. நகவளைவி னுட்பட்டவை பாடலி னெண். மற்றவை அடியினெண். இவருடைய பாடல்களில் மற்றும் பல அணிகளும் நகைச் சுவையுமுண்டு. இவரது பாடற்கருத்துத் திருவாதவூரடிகள் வாக்கிலும் வந்துள்ளது. இவர் இங்ஙனம் பல நயமுமுறச் செய்யுளியற்றலி லன்றியும் பொருள் கூறுதலிலும் பலரினு மேம்பட்டவரென்பது இறையனாரகப்பொரு ளுரையின் முற்கூற்றிலுள்ள வாக்கியத்தால் விளங்கும்.
|