3. மருதனிள நாகனார். 23


இதனால், கள்ளுண்டலை நீக்குதலையே அறமாகக்கொண்டு தேவகுரு தேவருக்கும் நீக்காமையையே அறமாகக்கொண்டு அசுரகுரு அசுரருக்கும் நூலறிவுறுத்தின ரென்று தெரிகின்றது.

6. ஒட்டகம் வெள்ளென்பைத் தின்று பசிதீரு மென்பது :

"குறும்பொறை யுணங்குந் ததர்வெள் ளென்பு
கடுங்கா லொட்டகத் தல்குபசி தீர்க்குங்
கன்னெடுங் கவலைய கானம்’’ -அகம். 245 : 17 - 19.

இதன்பொருள் ஆராயத்தக்கது.

இவையன்றியும் இவர் பாடலால் திருமாவுண்ணி என்பவள் ஒரு நகிலறுத்தாளென்பதும் காழூரில் ஒரு பூதம் வேங்கை தந்த தென்பதும் முதலிய மற்றுஞ் சில அரிய செய்திகளும் மகளிர் கூந்தலை ஆடவர்களுள் அவர் கணவரே தீண்டுதற்குரிய ரென்பதும் போர்க்களம் வென்றவர்க்கே உரியதென்பது முதலிய சில மரபுகளும் குதிரையுடலிற் சேதிகை குத்துதல், மார்பிற் பொறி யொற்றிக்கொண்டாளுதல், கூந்தற்குத் தகரமும் நானமும் பூசுதல் முதலிய பழைய வழக்கங்களும் அறியப்படுகின்றன.

அந்தணர் மணம் புரியுங்கால் எரிவலஞ்செய்தல், ஒருவன் தன் பிள்ளைக்குத் தன் தகப்பனார் பெயரை யிடுதல், குழந்தைகளுக்கு உணவு கூறிட்டு ஊட்டுதல், குழந்தைகளைக் கோயில்களுக்கு விளையாடச்செய்துவர 
அனுப்புதல், தெய்வத்தால் தெளிவித்தல், காமனுக்கு வேனிற்காலத்து விழா அயர்தல், ஓலைக்கு முத்திரையிடுதல் முதலியன பண்டேயுள்ள வழக்கமென்றும் விளங்குகின்றன.

வேறு காரியத்தை விட்டிருத்தலென்னும் பொருளில் வழங்கும் ‘மினக்கெடுதல்’ அல்லது ‘மெனக்கெடுதல்’ என்பதின் உண்மை யுருவம் வினைக்கெடுதல் என்பதெனவும் ‘திலகம்’ என்பது ஓர் அணிகலனுக்கும் பெயரெனவும் 1‘நோதிறம்’ என்பது ஒரு பண்ணெனவும் அரியசொற் பொருள்களை இவர் தெளிவாகும்படி கூறயிருக்கிறார்.

மேலும் இவர் இயற்கையாகவும் செயற்கையாகவும் ஒவ்வோருறுப்பிலும் மனத்திலு நிகழுஞ் செயல்களை நுனித்தறிந்து ஆங்காங்கு உணர்த்துவார்; அதனை

"நெடிதுசே ணிகந்தவை காணினுந் தானுற்ற
வடுக்காட்டக் கண்காணா தற்றாகும்’’.-கலி. 99.
"இறந்த களியா னிதழ்மறைந்த கண்ணள்’’. -கலி. 92.
"ஓர்த்த திசைக்கும் பறைபோனின் னெஞ்சத்து
வேட்டதே கண்டாய் கனா’’. -கலி. 92.


1 நேர்திறமென்று வழங்கும் பண்ணின் பெயர் நோதிறமென்று திருந்த வேண்டுமென்று தோற்றுகிறது.