இம்முகவுரையின்பின், முதற்சம்புடத்திலன்றி இச்சம்புடத்தில் வந்துள்ள நூற்பெயர் முதலியவற்றின் அகராதியும் செய்யுள் முதற்குறிப் பகராதியும் இப்பதிப்பைப்பற்றி மஹாமஹோபாத்தியாயர் தாக்ஷிணாத்திய கலாநிதியென்னும் சிறப்புப் பட்டங்களைப் பெற்று விளங்கும் பிரஹ்மஸ்ரீ உ,வே. சாமிநாதையரவர்களும் மதுரைத் தமிழ்ச் சங்கத்துச் செந்தமிழ் முதலிய பத்திரிகைகளின் ஆசிரியர்களும் எழுதியுள்ள அபிப்பிராயங்களும் சேர்க்கப்பெற்றிருக்கின்றன. இந்நூல் விரைவில் இனிது நிறைவேறத் தமிழ்த்தெய்வத்தின் திருவருளை வேண்டுகின்றேன்.
திருவேட்டீசுவரன்பேட்டை
குரோதன |
இங்ஙனம்:
இ.வை. அனந்தராமையன். |
|