964 கலித்தொகை

முறைப்பட வினையை முடித்துக் காட்டிப்
பாட்டிடை மெய்ப்பாடு பாங்குறத் தெரித்துப்
30.  பாற்பட நூலின் யாப்புற வுரைத்த
நாற்பெயர் பெயரா நடப்பக் கிடத்திப்
போற்ற வின்னுரை பொருள்பெற 1விளம்பியும்,
வையம் புகழ்ந்து மணிமுடி சூட்டிய
பொய்யில் வான்கதை பொதிந்த செந்தமிழ்ச்
35 சிந்தா மணியைத் தெண்கடன் மாநிலம்
வந்தா தரிப்ப 2வண்பெரு வஞ்சிப்
பொய்யா மொழிபுகழ் மையறு காட்சித்
திருத்தரு முனிவன் கருத்திது வென்னப்
பருப்பொருள் கடிந்து 3பொருட்டொடர்ப் படுத்து
40.  வினையொடு முடியப் புனையுரை யுரைத்தும்,
நல்லறி வுடைய தொல்பே ராசான்
கல்வியுங் காட்சியுங் காசினி யறியப்
பொருடெரி குறுந்தொகை யிருபது பாட்டிற்
கிதுபொரு ளென்றவ னெழுதா தொழிய
45  விதுபொரு ளென்றதற் கேற்ப வுரைத்தும்,
தண்டமிழ் 4தெரித்த வண்புகழ் மறையோன்
வண்டிமிர் சோலை மதுரா புரிதனி
லெண்டிசை விளங்க வந்த வாசான்
பயின்ற கேள்விப் பாரத்து வாச
50 னான்மறை துணிந்த நற்பொரு ளாகிய
தூய ஞான நிறைந்த சிவச்சுடர்
தானே யாகிய தன்மை யாள
னவின்ற வாய்மை நச்சினார்க் கினிய
5னிருவினை கடியு மருவியம் பொதியின்
55  மருவிய குறுமுனி தெரிதமிழ் விளங்க
வூழி யூழி காலம். 
வாழி வாழியிம் மண்மிசை யானே.

(பிரதிபேதம்) 1அமைத்தும், 2வரைபெரு வஞ்சிப், 3 பொருட்டொடர் படுத்து, 4தெரிந்தவண் புகழ், 5அருவினைகடியும்.