காரணமாகிய பிரிவினையும், பிரிவினை ஆற்றியிருத்தலாகிய முல்லையினையும், ஆற்றியிருத்தலின் பயனாகிய ஊடலுடன்
கூடலையும் முறையே கூறியுள்ளமை கூர்ந்து நோக்கிக்
கொண்டாடற் குரியதாம்,
குறிஞ்சிக்கண் தலைவியின்
இற்செறிப்புக்குக் காரணமாகத் தினை முற்றியமையினைக்
கூறுதல் விடுத்து, "கார்மயிலன்னாள்
இமிழக் கிளியெழா வார்த்து,” எனத் தலைமகளின் முதுக்குறைவினைக் குறிப்பிடுதலும், நல்வினையானது மிகுதலாற் செல்வம் மிகுமென நன்னெறி கூறலும், வேங்கையினைத் தீத்தீண்டு கையார் என்றலும், நீர்வீழ்ச்சியினை, மானீல மாண்ட துகிலுமிழ்வ தொக்கு மெனக் கூறலும் படிப்பார் நெஞ்சைப் பற்றுவனவாகும். இரவுக்குறி விலக்கல் கூறுமுகத்தான், ஆங்காங்குக் குறிஞ்சி நிலத்தின் தன்மை கண்கூடாகக் காணுமாறு போற் கூறப்பட்டுள்ளது. அறத்தொடு நிற்றல் வாயிலாய்க் களிறுதரு புணர்ச்சி, பூத்தரு புணர்ச்சி புனல்தரு புணர்ச்சிகள் இங்குப் பொலிவுடன் காணப்படுகின்றன. மலைநாட்டுச் சிற்றூர், "ஒருவரைபோ லெங்கும் பல்வரையுஞ் சூழ்ந்த, அருவரை யுள்ளதாம்,” எனக் கூறப்படுதலும், "பலாவெழுந்த பால் வருக்கை,” எனத் தொடங்கிப் பகற்குறியிட வமைதியினைக் காட்டும் பண்பும் மனத்தகத்தே பதியவைக்கும் மாண்புடையனவாம். ஓரம்பாற் போக்குதலும்,
ஈரம்பாற் போக்காமையுமாகிய சொன்னயமும் இங்குக்
காணலாம்.
நெய்தற்கண் ஆங்காங்குக்
கடற்காட்சிகளும், நெய்தனிலக் கருப்பொருள்களும்
நிறைந்து நின்று கற்பார் கருத்தைக் கவருகின்றன, "தாமரையாகிய முகம் நீலமாகிய கண்ணால்
உறங்கும்,” எனவும், "குருகு தாழை முகையினைக் குஞ்சு என்று கருதிக் காக்கும்,” எனவும், இறைச்சிப் பொருள் கையாளப் பெற்றுள்ளது. வலிதாகக் குறை
நயப்பித்த நாகரீகம் நாற்பதாவது செய்யுளிற் கண்டுகளிக்கும்
வண்ணம் காணப்படுகின்றது. தலைவிக்குக் கையுறையாகக்
கொண்டு செல்வது இளந்தளிர்களேயன்றித்
|