1. ஞானாவரணீயம்,
2, தரிசனாவரணீயம், 3. மோகனீயம், 4. அந்தராயம் என்ற நான்கும் காதிவினை எனப்படும்,
ஆன்மாவின் குணங்களைக் காதம் பண்ணுவதனால் (கெடுப்பதனால்)காதிவினை என்றாயிற்று.
1. வேதனீயம், 2. ஆயுஷ்யம், 3 நாமம், 4 கோத்திரம் என்ற நான்கும் அகாதிவினை
யெனப்படும். காதிவினையின் பிரிவான ஞானாவரணீயம் முதலியநான்கும் ஒரு சேர நீங்குதலும்.
அதனால் அனந்தஞானம், அனந்த தரிசனம். அனந்தசுகம், அனந்தவீர்யம் என்ற நான்கு குணங்களும்
ஒருசேர விளங்குதலும் இயல்பு.
1இவற்றை
எய்திய நிலை, குணத்தாலடைந்த கைவல்யநிலை எனப்படும். ஆதலின், ‘கேவலத்து அலகிலாத
அனந்த குணக்கடல் என்றார். ‘பாலனைய சிந்தை சுடரப் படர் செய் காதி, நாலுமுடனே
யரிந்து நான்மைவரம்பாகிக்,
காலமொரு மூன்று முடனேயுணர்ந்த
கடவுள்‘ (சீவக.3902-ல்)என்றார் திருத்தக்க தேவரும்.
இனி, ‘கேவலத்து
அலகிலாத வனந்தகுணக்கடல்’என்பதனை, காதி அகாதி என்ற இருவினையும் கெட உயிர் எண்குணமும்
அடைந்து உலகின் உச்சியை அடையும் கைவல்யநிலை என்று பொருள்கொண்டு, இச்செய்யுள்
சித்
தர் வணக்கம் எனலுமா. அனந்தஞானம்
என்பதுகேவலஞானம் எனவும் வழங்கப்படும். உலக முற்றிலும் உள்ள நிகழ்ச்சியனைத்தையும்
ஒருங்கேயறிவதனால் அனந்த ஞானம் என்றும். ஐம்பொறிகளின் உதவியும் வேறு உதவியும்
இன்று உயிரின் இயற்கையான குணம் ஒன்றனையே கொண்டு அறிவதனால் கேவலஞானம்2
என்றும் கூறப்படும்.
|
‘எல்லா
முணர்ந்தானவனே யிறை’ என்ற நீலகேசிச் செய்யுட்கு உரையில் ‘தானும் பிறிதுமாகிய
திரவியகுணபரியாயங்களைப் பிரத்யக்ஷமாக வுணர்ந்த கேவல ஞானமும், அதனோடு அவினாபாவியாகிய
கேவலதரிசன, கேவல வீரிய, கேவல சுகமுமுடையானவனே சுவாமி‘ என்று கூறியிருப்பது
காண்க. |
2 |
‘இந்தரியாதி சகாயமின்றித் தோன்றும்
சம்பூர்ண ஞானம் கேவலஞானம் எனப்படும்; சம்பூர்ணதரிசனம் கேவல தரிசனம் எனப்படும்;
கேவலஞானம தரிசன ஸ்வபாவமுடையவன் பகவன்’. (மேரு.முன்னுரை, பக்.42.)
|
|