- 56 -

மனுஷ்யகதி வரலாறு

39.  ஓரினார் முழங்கை தன்மே லோரொரு பதேசமேறி
  மூரிவெஞ் சிலைகண் மூவி ராயிர முற்ற வுற்ற (விட்ட
  பாரின்மேல் மனிதர் யாக்கை பண்டுநாங் கொண்டு
  வாரிவாய் மணலு மாற்றா வகையின வல்ல வோதான்.

(இ-ள்.) ஓரின்-ஆராயின், பாதின்மேல் - இம்மண்ணுலகில், ஓர் முழங்கை-ஒரு முழவுயரத்திலும், தன்மேல் அவ் வொருமுழவுயரத்தின்மேல், ஒரொரு பதேசம் ஏறி- ஒவ்வொரு பிரதேசமாக வுயர்ந்து. மூரிவெஞ்சிலைகள் மூஈர்ஆயிரம் முற்ற உற்ற-ஆறாயிரம் வில் ஈறாக அடைந்த, மனிதர்யாக்கை - மக்கள் உடல்களுள், பண்டு நாம் கொண்டு விட்ட - முன்பு நாம் எடுத்து இழந்தவை, வாரிவாய் மணலும்-கடலினிடத்துள்ள நுண்மணலின் தொகையும், ஆற்றாவகையினவல்லவோ-ஈடாகாத தன்மையினவல்லவோ?’ (எ-று.)

ஒரு முழமுதல் ஆறாயிரம் வில் ஈறாக நாம் எடுத்துக் கழித்துள்ள மனிதயாக்கை யெண்ணில என்க.

உத்சர்ப்பிணி, அவசர்ப்பிணி யென்னும் கால வேற்றுமையினால் மனிதயாக்கை உயர்வு தாழ்வு பெறுகிறது.  ‘ஒரு முழம் பதினையாண்டுந்தி யுந்திமேல் வருசிலையறாயிரம்‘(மேரு.1231) என்பது காண்க.  காலவியல்பை யொட்டி இப்பரதகண்டம் போக பூமியாகவும்,  கர்மபூமியாகவும் மாறுகிறது.  இவற்றுள் போகபூமியாயிருக்கும்போது, மானிடர்க்கு உயரம் அதிகமாகிறது,  கர்மபூமியாயிருக்கும்  போது உயரம் குறைகிறது.  இதனை,

  ‘கருமமும் போகமு மிருமை யுமுடன்
  மரிய முன் னிலங்களுட் பரதரேவதம்
  இருமைய முதலமுக் காலம் போகத்தின்
  மருவிய கருமத்தை மற்றை மூன்றுமே.’

(மேரு. 1233.) என்று கூறியது காண்க ‘பாண்டு நாங்கொண்டு விட்ட வாரிவாய் மணலுமாற்றா’ என்றது,