- 59 -

தார்க்கு 2-1/2 முழம். (11) உபரிம க்ரைவேயகத்தார்க்கு 2-முழம். (12) நவ அணுதிசையிலுள்ளார்க்கு 1-1/2 - முழம், (13) பஞ்ச அநுத்தாத்துள்ளவர்களுக்கு 1 முழம் என.

இவற்றை,

“எழுமு ழம் முதற் கேழரை வீழ்ந்திடை
யொழிமு ழங்கற்பத் துச்சியின் மூன்றரை
விழுமு ழம்மரை யைந்துடன் வீழ்ந்துமே
லொழிமு ழம்மொன்ற நுத்தரத் தோக்கமே.”

(மேரு. 500) என்னுஞ் செய்யுளாலறியலாகும்,

விரிவகையால் பத்தும் தொகை வகையால் ஒன்றுமாகிய பவணருலகம் நமக்குக் கீழேயுளது.  அது நாகருலகம் எனவும் வழங்கப்படும்.  அவ்விடத்து வாழும் அசுரகுமாரர்களுக்கு உடம்பின் உயரம் இருபத்தைந்துவில் ஆகும்.  இதனை ‘அவணுறை யசுரருக் காயு வான்கடல், உவமையில் தனுத்தனு வையைந் தோங்கினார்‘* என்றதனா லறியலாகும். மேலே கூறிய நவ க்ரைவேயகத்துள்ள தேவர்களின் உடலின் உயரமான   இரண்டு முழம் முதலாக அசுரகுமார்களது  உடல்களின் உயரமான இருபத்தைந்து வில் வரையிலும் கூறுவாராகி, ‘இருமுழ மாதியாக... இருபத்தைந்தின் வந்துறும’ என்றார்.  அசுரகுமாரர்களுக்கு மேற்பட்டவுயரம் தேவர்கட்கு இல்லை யென்றறிக.  இவற்றின் விரிவு பதார்த்தசாரத்துட் காண்க. ‘உரைக்கலாமோ‘  ஓகாரம், எதிர்மறை.

    ஒருமுழ முதலாக என்று கூறாது ‘இருமுழ மாதிபாக’ என்று கூறியது என்னை யெனின், ஒன்றரை முழவுயரமுள்ள நவாணுத்திசை தேவர்களும், ஒருமுழ வுயரமேயுள்ள பஞ்சாநுத்தர தேவர்களும் இரண்டு அல்லது மூன்று பிறவிகளில் மோக்ஷம் அடைந்துவிடுவார்கள். இரண்டுமுழ வுயரமுடைய நவக்ரைவேயகத்து உபபாத



* தணு - வில். தனு - உடல். மேரு. 1224.