ஆசார்யர்
வணக்கம்
54. |
ஐவகை யொழுக்க மென்னு மருங்கல மொருங் கணிந்தார |
|
மெய்வகை விளக்கஞ் சொல்லி நல்லற
மிகவ ளிப்பார் |
|
பவ்வியர் தம்மைத் தம்போற்
பஞ்சநல் லொழுக்கம் பாரித் |
|
தவ்விய மகற்றந் தொல்லா சிரியரெம்
மல்ல றீர்ப்பார். |
(இ-ள்.)
ஐவகை - (ஞானம் முதலிய) ஐந்து வகையான ஒழுக்கம் என்னும் --, அருங்கலம் - கிடைத்தற்கரியஅணிகலன்களை,
ஒருங்கு அணிந்தார் -ஒருசேர அணிந்த வரும், மெய்வகை விளக்கம் சொல்லி - (எண்வகை)
மெய்ப் பொருள்களின் கூறுபாடுகளை விளங்க
வெடுத்தோதி, நல்லறம் - திருவறத்தை, மிக அளிப்பார் - மேன்மையுறவுபதேசிப்பவரும்,
பவ்வியர் தம்மை - பக்குவமுற்ற ஜீவன்களை, தம்போல் - தம்மைபோல, பஞ்சநல்லொழுக்கம்
பாரித்து-(கொல்லாமை முதலிய)
ஐந்துவகை நல்லொழுக்கங்களை மேற்கொள்ளுவித்து, அவ்வியம் அகற்றும்-மனக் கோட்டங்களை
நீக்குபவரும் ஆகிய, தொல் ஆசிரியர்-தொன்று தொட்டு (பாரம்பர்யமாக) வரும் ஆசாரிய
பரமேஷ்டிகளே, எம் அல்லல் தீர்ப்பார் - நம் துன்பத்தைப்போக்குவர் ஆதலின் அவரை
வணங்குவாம்). (எ-று.)
ஐவகை ஆசாரங்களிற் பொருந்தியவராய் பவ்வியர்களுக்கு
அறங்கூறித் தீக்ஷை அளிக்கும் ஆசார்யர்களை வணங்குவா மென்பதாம்.
ஐவகை ஒழுக்கமான;-ஞானம், தரிசனம், சாரித்ரம்,
தவம், வீரியம் என்பன. அவை ஒவ்வொன்றும் விரிவகையாற் பலவிதமாகும். இவ் வைந்து
ஒழுக்கங்களையும் வடநூலர£ பஞ்சாசாரம் என்பர். அவற்றுள்,
1. ஞானாசாரம்;-1. பரமாகமத்திலுள்ள சொற்களைக் குற்றமின்றி மொழிதல்,
2, அச் சொற்களின் பொருள்களை மனத்தில் தரித்தல், 3. அச் சொற்களிலும் பொருள்களிலும்
உள்ள குற்றமற்ற தன்மையினை மறவாதிருத்தல் 4. படிப்பதற்குத் தகுந்த காலமும் இடமும்
அறிந்து படித்தல், 5. அறிவு வளர்ச்சிக்குக் காரணமான விரதங்களில் ஒழுகுதல், 6.
மும்மணிக
|