இங்கு முதலில் கூறிய ஐவகை ஒழுக்கமென்பது
முனிவர்களின் ஒழுக்கமாதலாலும், சாரித்ராசாரத்தின் உட்பிரிவிலேயே கொல்லாமை முதலிய
ஐந்து மஹாவிரதம் பொருந்தி யிருப்பதனாலும், ‘ஐவகை ஒழுக்கம்‘ என்பதற்குக் கொல்லாமை முதலிய ஐந்து எனப் பொருள் கொள்வது பொருந்தா வென்றுணர்க.
மெய்வகை - மெய்ப்பொருளின் வகை.
அவை - ஆப்தன், ஆகமம், பதார்த்தம், பிரமாணம், பிரவ்ருத்தி, லிங்கம், சாரித்ரம்,
பலம் என எட்டு வகைப்படும், இவற்றின் விரிவினை அஷ்டபதார்த்த சாரம் என்னும்
நூலிற் கண்டுகொள்க.
பவ்வியர்;- நற்காட்சி பெற்றுக்
கிராமத்தில் முக்தியெய்தும் பக்குவம் உடையவர்; அபவ்யர் எக்காலத்தும் நற்காட்சி
பெறாது பிறவியிலேயே கட்டுண்டுகிடப்பவர். பாரித்தல் - உண்டாக்கல்; தம்மைப்போல்
நல்விழியில் ஒழுகச் செய்தல். அவ்வியம்-மனக்கோட்டம்.
கோட்டம்-கோணல். ‘அவ்வியமகன்று‘ என்னும் (சீவக. 394.) செய்யுளுரை காண்க.
தொல் - பழமை. இறைவனருளிய பழமையான அறத்தை மேற்கொண்டதால் தொல்லா சிரியரெனப்பட்டனர்.
இதனை,
|
‘தொன்மாண்பமைந்த புனை நல்லறம்
துன்னி நின்ற |
|
சொன்மாண் பமைந்த குழு.‘ |
என்று (சீவக. 3-ல்) கூறியத னாலறியலாகும்.
(50)
உபாத்தியாயர்
வணக்கம்
55. |
அ
ங்க
நூலாதி யாவு மரிறபத்1
தெரிந்து தீமைப் |
|
பங்கவிழ்2
பங்க மாடிப்3 பரமநன்4
னெறிப யின்றிட் |
|
டங்கபூ
வாதி மெய்ந்நூ லமிழ்தகப் படுத்த டைந்த |
|
நங்களுக் களிக்கு நீரார் நம்வினை
கழுவு நீரார். |
1
பாடம் அறிப்பறத்.
2 பங்கம் வீழ். பங்கமேழ்.
3
பங்கம் பாடி.
4 பரமனன்னெறி. |
|