- 92 -

ப்ராணாவாயம் க்ரியாவிஸாலம்; லோக பிந்து  ஸாரம் என்பன. ஆதி யென்றதனால் பதினாறுவித பஹுருத ஆகமங்கள் கொள்ளப்படும்.  பஹுருத   ஆகமம் பதினாறாவன;--1.ஸாமாயிகம், 2. சதுர்விம்ஸதி ஸ்தவம், 3. வந்தனை, 4. ப்ரதிக்ரமணம், 5. வைநயிகம், 6. க்ரதிகர்மம், 7. தசவைகாளிகம், 8. அனுத்தராத் த்யயனம், 9. கல்ப்ய வ்யவஹாரம். 10, கல்ப்யா கல்ப்யம்.11. மஹாகல்ப்யம், 12. புண்டரீகம், 13. மஹாபுண்டரீகம், 14. பத்மம், 15. மஹாபத்மம், 16. சிந்யசீதிகை என்பன.  இவை* ப்ரகீர்ணகம் எனவும் வழங்கும். ஆகமம் நாற்பத்திரண்டு என்பது,

  ‘வினவிய பொருளெலாம்...  தனித்தனி
  யாகம் நாற்பத்தி ரண்டதாய்‘  (மேரு. 1213) என்றும்,
  “ஆறிரண் டங்கமு மாய்ந்தீரேழ்  பூவமுங்
  கூறிரண்டென கேள்விகளிற்  குன்றாமற்-றேறி
  வரந்தருநல் லோத்துரைக்கும் வாய்மையாற் பாத
  நிரந்தரநான் வந்திப்ப னின்று.’ என்றும் (சீவசம்.4.)

கூறுவதனால் அறியலாகும்.

அரில் - குற்றம்; ஐயம் முதலிய குற்றம்.  ‘அதங்கோட்டாசாற்கரிறபத் தெரித்து‘  (தொல்-பாயிரம்) என்பது காண்க.  தெரிந்து - தெளிந்து.  தெளிந்தோரே அறமுரைக்க வல்லுந ராதலின், ‘தெரிந்து‘ என்றார். பங்கு - பிரிவு. தீமையின் பிரிவினை  மேருமந்தரம் ஆறாவது சருக்கத்திலும் நீல கேசியிலும் காணலாம்.

  ‘அறுவர்தந் நூலு மறிந்துணர்வு  பற்றி
  மறுவரவு மாறான நீக்கி -- மறுவரலின்
  ஆசாரியனா மறுதலைச்  சொல்  மாற்றுதலே
  ஆசாரியனா தமைவு.‘

என்ற (ஏலாதி. 75.) செய்யுள் இங்கு நோக்கற்பாலது.

 

* இதன் விவரம் அஷ்டபதார்த்த சாரத்தில்  கண்டுகொள்க: