களும், ஏழுவித பங்கங்களுள் 1; உண்டு 2. இல்லை என்ற முதல்
இரண்டு பங்கங்களாகக் கூறப்படும். இதனை,
|
‘உண்டோ தனதியல்பி லுணருங்காலை
யுயிரென்றி |
|
யுண்டாய வவ்வுயிரே பிறிதினில்லை
யெனவுரைத்தி‘ |
(சீவக. 1419). என்ற செய்யுளின் உரையில்,
‘உணருங்காலத்து உயிர் தனதியல்பால் உண்டேயென்று
கூறாநின்றாய்; உண்டாய அந்தவுயிர்தானே பிறிதொன்றி னியல்பான் இல்லை யென வுரையாநின்றாய்‘ எனவும், ‘ஒருபொருளிலே யுண்டு மில்லையுங்
கூறினார். உயிர் ஒருவனிடத்துண்டு, தூணிலில்லை. தூணிலில்லாமையும் அவ்வுயி்ர்க்கேற்றுக. இதனால் உயிர்தனக்கே உண்டுமில்லையுந்
தங்கின‘. எனவும் கூறிய நச்சினர்க்கினியர் உரையாலும், ‘தந்தவுலகின் பொருளனைத்தும் தமதுண்மையினாலுளவாகும், அந்தமிலதன்
பிறகுணத்தினுளவல்லனவா மெனவறைந்தாய்‘ என்று (திருக்கலம்) கூறியதனாலும் அறியலாகும்.
ஒரு பொருளிடத்துள்ள உண்டு இல்லை என்ற தன்மைகள்
ஒவ்வொருவகையால் காணப்பட்டபோதினும் அவ்விரண்டும் ஒரு பொருளின் தன்மையாதலால் அவற்றை முறையே உண்டுமில்லையும் என்று
கூறுவது மூன்றாவது பங்கமாகும். ‘உண்மையு மின்மை தானுமொருபொருள் தன்மையாகும், வண்மையைச் சொல்லும் மூன்றாம்
பங்கம்‘ என்று (மேரு 709.) கூறியது காண்க. இங்கு உண்மை என்றது உண்டு என்னும் பொருளது.
‘பொருள் ஒன்றாகலின் தன்மையினைமட்டும் இரண்டாகக்
கூறுவானேன்? அவ்விருதன்மைகளையும் ஒரே சமயத்து ஒருங்கே ஒரு சொல்லாகக் கூறுக‘ எனின் கூறவியலாது. அஃது 4. உரைக்கொணாமை (சொல்லொணாமை)
என்ற நான்காவது பங்கமாகும். அதாவது உண்டு இல்லை என்பன ஒரு பொருளின் தன்மையாதலானும், அவ் விருதன்மைகளும் ஒருபொருளிலேயே கிடத்தலானும்,
|