சிறு தெய்வங்களுக்கு இடும் பலியினையும், மருந்திற்காகவும்
சிரார்த்தத்திற்காகவும் புசிப்பதற்காகவும் இடும்பலியினையும் தொகுத்து, ‘கொலைமலி கொடுமை தன்னை குறைத்திடும்‘ என்றான். ‘மனத்திற்
கோலச் சிலை மலி நுதலினார் தங் காதலி றீமை செப்பும்‘ என்பதற்குத் தீயமாதர் தம் மனத்தில் ஏற்படும் காதலால் விளையும்
தீமை என்றேனும், தீய மாதர் மேல் (ஆடவர்) கொண்ட காதலின் தீமை என்றேனும் பொருள் கோடலாம். மனத்தில் என்பதனை காதலுக்குக்
கூட்டியுரைப்பினுமாம். (66)
71. |
பிறந்தவர் முயற்சி யாலே பெறுபய னடைவ ரல்லா1 |
|
லிறந்தவர் பிறந்த தில்லை யிருவினை தானு மில்லென |
|
றறைந்தவ ரறிவி லாமை யதுவிடுத் தறநெ றிக்கட் |
|
சிறந்தன முயலப் பண்ணுஞ் செப்புமிப் பொருண்மை |
|
[யென்றான் |
(இ-ள்.)
செப்பும் இப் பொருண்மை-(யாம்) கூறும் இவ்வறப் பொருளின் தன்மை, பிறந்தவர் - மானிடராகப்பிறந்த ஒவ்வொருவரும், பெறுபயன்
- பெறுதற்குரிய நலங்களை, முயற்சியாலே-(தத்தம்) முயற்சியினாலேயே, அடைவர்-பெறுவார்கள்; அல்லால்-அல்லாமல், இறந்தவர் பிறந்தது இல்லை-இறந்தவர்களே மீண்டும்
பிறந்தது கிடையாது, இருவினை தானும்-இருவினைகளும், இல்லென்று-இல்லை யென்று, அறைந்தவர் - கூறியவர்கள், அறிவில்லாமை அது
விடுத்து-(அவ்வாறு கூறுதற் கேதுவாகிய) அவ்வறி வில்லாமையை விட்டு விட்டு, அற நெறிக் கண் சிறந்தன முயலப்பண்ணும்-தரும மார்க்கங்களிற்
சிறந்ததாகிய வீடுபேற்றை அடைய முயலச்செய்யும், என்றான் -என்றனன். (எ-று.)
இவ்வுறவுரை, மறுபிறவியும் அதற்குக் காரணமாகிய உயிரும், புண்ணிய
பாபமாகிய இருவினைகளும், இல்லை
|