- 187 -
141.  என்னைகொல் மாவின் செய்கை யிவ்வுயிர் பெற்ற பெற்றி
  சென்னிவா ளெறிய வோடிச் சிலம்பிய குரலி தென்கொல
  பின்னிய பிறவி மாலைப் பெருநவை தருதற் கொத்த
  கொன்னியல் பாவ மென்னைக் கூவுகின் றதுகொ லென்றான்.

(இ-ள்.) மாவின் செய்கை -அரிசிமாவாற் செய்தகோழியினிடத்து, இவ்வுயிர் பெற்ற பெற்றி - இந்த உயிர் பெற்ற தன்மை, என்னைகொல் - யாது காரணமோ ! வாள் - என்   கைவாளால், சென்னி எறிய - (இதன்) தலையை அரிய, ஓடிச் சிலம்பிய குரல் இது - துள்ளியோடிக் கூவிய இக்குரல், என்கொல் - யாதோ! பின்னிய பிறவிமாலை-தொடர்ச்சியான பல பிறவித்தொடரினது,  பெருநவை - மிக்க துன்பத்தை, தருதற்கு - தருவதற்கு, ஒத்த - ஏற்றதாகிய, கொன் இயல் பாவம் - அஞ்சத்தக்க  இயல்பினையுடைய பாவம், என்னை - -, கூவுகின்றது கொல் - (தீக்கதியில் வருமாறு) விளித்துக் கூவுகின்றதோ, என்றான் - என்று சிந்தித்தான். (எ-று.)

இம் மாக்கோழி உயிர் பெற்றுக் கூவுகின்றதை நோக்கின், என்னை நரகத்திற்கு அழைப்பதுபோல் புலப்படுகின்றது என்று எண்ணினானென்க.

இம் மாக்கோழியில் தெய்வம் வந்து கரந்திருந்ததைஅரசன் அறியானாகலின், ‘என்னை கொல் மாவின்செய்கை‘ என்றும், ‘சென்னி வாளெறிய வோடிச் சிலம்பிய குரலி தென்கொல்‘ என்றும் வியந்து அஞ்சினா னென்க.வினை சம்பந்தமாக ஒன்றைஒன்று தொடரப்பட்டுப் பிறவிகள்தம்முள் மாலைபோலத் தொடர்ந்து வருதலின், ‘பின்னியபிறவி மாலை‘ என்றார்.  கொன் - அச்சம்.(69)  

142.  ஆதகா தன்னை சொல்லா லறிவிலே னருளில் செய்கை
  ஆதகா தழிந்த புள்வா யரிகுர லரியு நெஞ்சை
  ஆதகா தமிர்த முன்னா மதியவள் களவு கொல்லும் [ன்.
  ஆதகாவினைக ளென்னை யடர்த்துநின் றடுங்கொ லென்றா.

(இ-ள்.) அன்னை சொல்லால் - --, அறிவு இலேன் -பகுத்தறிவு அற்றவனான யான் செய்த, அருள் இல் செய்கை-