அரிய மாணிக்கமணிபோலச்
செந்நிறமாகிய ஒளி விளங்குந் தேவனாகி, மிகை பெறு கடல்கள் பத்தும் - (தனக்குரிய)
பத்துக் கடற் காலத்தின் மேலும் (சிறிது) அதிகமாகப் பெற்ற வாழ்நாட்கள் முழுவதும்,
திருமணிய துணை முலைய - திருத்தங்கிய தெய்வீகமாகிய மணி யணி களை அணிந்த இரண்டு ஸ்தனங்களையுடைய,
தெய்வமடவாரோடு - தேவமகளிரோடு, அருமையிலன் - எளிதின் இன்பம் நுகர்ந்தவனாகி,
அகம் மகிழ்வின் - உள்ளக் களிப்பினால்,அவன் மருவும் - அத்தேவன் இன்புறுவானாயினான்.
(எ-று.)
அசோகன்,
பிரம்ம கல்ப இந்திரனாகி இன்புற்றானென்க.
ப்ரம்ம
கற்பம், ஐந்தாவது கற்ப உலகம். மிகை - அதிகம். பத்துக் கடற்காலத்தின் மேல்
சிறிது அதிகம் என்க. பிரம்ம கற்ப (வுலக) தேவர்களுக்கு உத்தமாயுஷ்யம் பத்துக்கடல்
என்று ஆகமத்துக் கூறியிருந்தும் ஒவ்வொரு கல்பத்தார்க்கும் அரை அரை கடல் உத்க்ரஷ்டோத்
க்ரஷ்டமாக (மிக அதிகமாக) பெறுதலும் மரபாதலின், ஈண்டு பத்துக் கடலின் மேலும் அதிகம்
என்று கூறுவதற்கு, மிகை பெறுகடல் என்றார். இதனை, ‘ஒதியவரைக் கடல் உத்த வுத்தமம’ என்னும்
(மேரு. 506, 498) வாமன முனிவர் வாக்கானும் அறியலாம். கடல் - ஒருகால அளவை. மாதர்
பலராதலின் மடவார் என்றார். எளிதிற் கிடைத்தலின், ‘அருமையிலன்’ என்றார்.
மாது, ஓ என்பன - அசைகள் (59)
279. |
வஞ்சனையி லன்னையுடன் மன்னவனை
நஞ்சில் |
|
துஞ்சும்வகை சூழ்ந்துதொழு நோய்முழுது
மாகி |
|
அஞ்சின் மொழி யமிர்தமதி யருநரகின்
வீழ்ந்தாள் |
|
நஞ்சனைய வினைநலிய நாமநகை வேலோய். |
(இ-ள்.)
நாம நகை வேலோய் - அச்சந்தரும் ஒளியுடைய வேலேந்திய வேந்தனே, அம் சில் மொழி
- அழகிய சிலவாகிய மொழிகளையுடைய, அமிர்தமதி - --, வஞ்சனையின் - கபடத்தினால்,
மன்னவனை அன்னையுடன் -கணவனாகிய
அரசனை அவன் தாயோடு, நஞ்சில் துஞ்சும்வகை சூழ்ந்து - நஞ்சினால் இறக்குந் தன்மையை
ஆலோசித்துச் செய்து,
|