இவற்றை :
1. இரத்தினப்ரபை, 2. சர்க்கராப்ரபை, 3. வாலுகா ப்ரபை, 4.பங்கப்ரபை, 5. தூமப்ரபை,
6. தம ப்ரபை, 7. தமத்தம ப்ரபை என்பர். ப்ரபை, என்பது தமிழில் வட்டம் என வழங்கும்.
தமம் - இருள், தூமம் - புகை, பங்கம் - அளறு: (சேறு). வாலுகம் - மணல். சர்க்கரை
- (துண்டு துண்டாகிய) பரல், மணி - இரத்தினம். மருள் செய் உருவின என்றது இரத்தினத்திற்கு
அடைமொழி:
இவ்வடை மொழி: ரத்தினத்துக்கேயன்றி, ரத்னப்ரபை என்னும் நரகத்திற்கு அமையாது.
'குருதிக்கோட்டுக் குஞ்சர நகரம்‘ (சீவக. 2182.) என்றது போலக்கொள்க.
நரகங்களின் பெயர்களை, ‘இருளினிரு ளிருளின்மே, லாற்றப் புகையள றார் மணற் கூர்ம்பர
லாய்மணியே‘ என்னும் நீலகேசி (75) யானும், ‘இருளி னிருளுமிருளும் புகையும் மருளிலள
றும்மணலும் பரலும், மருளின்மணியும்’ என்னுஞ் சூளாமணி (துறவு. 85) யானும்,‘கூர்மணி
வெம்பர லீர்மணல்பங்கமும் ', ஈரும் புகையிருளோடிருளிருள்‘ என்னும் ஏலாதி யானும்
(67) அறியலாகும்.
281. |
மேருகிரி யுய்த்திடினும் வெப்பமொடு
தட்பம் |
|
நீரெனவு ருக்கிடுநி லப்புரைய வைந்தாம் |
|
ஓரினுறு புகைநரகி னுருகியுடன் வீழ்ந்தா |
|
ளாருமில ளறனுமில ளமிர்தமதி யவளே. |
(இ-ள்.) ஓரின் - உணருமிடத்து, அமிர்தமதியவள் - மேருகிரி உய்த்து
இடினும் - பெரிய பொன்மலையையேகொணர்ந்து தன்கண் இட்டபோதிலும், நீரென உருக்கிடும்-நீராய்
உருகியோடச் செய்யும், வெப்பமோடு தட்பம் - வெப்பமும் தட்பமுமுடைய, உறு புகைநரகின்
- சேர்ந்த புகையினையுடைய தூமப்ரபை யென்னும் ஐந்தாம் நரகத்தில், உருகி உடன் வீழ்ந்தாள்
- மனம் முதலியன உருகித் தலைகீழாக வீழ்ந்து வருந்தினாள், ஆரும் இலள் - (அந்நரகில்)
தனக்குச் சகாயராவார் எவரும் இல்லாதவளானாள்: (அதுவேயுமன்றி), அறனும் இலள் - திருவறத்தின்
துணையும் இல்லாதவளானாள். (எ-று.)
|