xxi
தமிழக முதலமைச்சர் கனம் பக்தவத்சலம் அவர்கள் வழங்கி அருளிய
மதிப்புரை
காஞ்சிமாநகர் பழம்பெரும் புண்ணியத் தலம்; இந்துக்கள் காசிக்குச்
சமமாக இதைக் கொண்டாடுகிறார்கள். வரலாறு நெடுக இந்த நகரம் புகழோடு
இருந்து வந்திருக்கக் காணலாம். பண்டைக் காலத்தில் தொண்டை
மண்டலத்தின் தலைநகராக இருந்த பெருமையும் இத்தலத்திற்கு உண்டு.
தென்னாட்டின் சமயம், கலை, கல்வி, இலக்கியம் ஆகியவற்றைப் பழைய
மரபு கெடாமல் போற்றி வளர்த்த முக்கியமான பதிகளுள் காஞ்சியும்
ஒன்றாகும். இதன் பெருமைக்கு ஓர் உரைகல்லாகக் காஞ்சிப்புராணம்
விளங்குகிறது,
புராணங்களைச் சமய சீலத்தின் ஒரு அம்சமாகவும், வாழ்க்கைநெறிக்கு வழிகாட்டும் அறநூல்களாகவும் நம்முடைய முன்னோர் மதித்து வந்தனர். புராணங்களைப் படித்தும், புராணப் பிரசங்கங்களைக் கேட்டும் பக்தி நெறியில் நின்று ஒழுகினார்கள். அவர்களது வாழ்க்கையில் வேதங்கள், சாஸ்திரங்களைப் போலவே புராணங்களும் சிறப்புப் பெற்றிருந்தன. இதனால் ஒவ்வொரு
தலத்தையும் பற்றி உள்ள திருவிளையாடல்களையும். ஐதீகங்களையும்
விரித்தும் தொகுத்தும் கூறும் தல புராணங்கள் பல பெருகின. இவை வெறும்
புராணக் கதைகளாக மட்டும் இல்லாமல் , மனப்பண்புகளை உயர்த்தி
மக்களுக்கு ஆத்ம சுகத்தையும் மன நிறைவையும் அளிக்கின்றன. இவற்றின்
வாயிலாக அக்கால மக்களின் சமய வாழ்க்கை , நம்பிக்கை, லட்சியம்,
ஒழுக்கம், உயர்ந்த பண்பாடு ஆகியவையும் நமக்குத் தெளிவாகின்றன.
ஆகையினால், தல புராணங்கள் சமய நோக்குடன் மட்டுமின்றி , ஆராய்ச்சி
நோக்குடனும் படிக்கத் தக்கவையாகும்.
தமிழில் உள்ள தல புராணங்களுள் காஞ்சிப் புராணத்திற்கு ஒரு தனிச்
சிறப்பு உண்டு . காஞ்சியைப் பற்றிப் பல
|