xxii
தல புராணங்கள் இருந்தபோதிலும், அவை எல்லாவற்றிலும் மிகச் சிறந்ததாக மதிக்கப்படுவது , சிவஞான சுவாமிகள் அருளிச் செய்த காஞ்சிப்
புராணமேயாகும். சுவாமிகள் வடமொழியும் தென்மொழியும் கரைகண்டவர்;
சிவாகமங்களை ஐயந்திரிபற அறிந்து ஓதியவர். அவருடைய தபோபலமும்
கல்விச் சிறப்பும் காஞ்சிப் புராணத்திற்குச் சைவ உலகிலும், தமிழிலக்கிய
உலகிலும் நிலையான இடத்தைத் தேடித் தந்துள்ளன.
முறையாகப் பாடங்கேட்பதும், பாட்டுக்களைப் படித்தே விளங்கிக்
கொள்வதும் இந்தக் காலத்தில் குறைந்துவிட்டன. இது உரைநடைக் காலம்.
எவ்வளவு பெரிய விஷயங்களையும் எளிதாகச் சொல்லவேண்டும் என்று
மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் , காஞ்சிப் புராணத்திற்கு எளிய
தமிழில் உரை எழுதி வெளியிடும் முயற்சி விரும்பி வரவேற்கத்தக்கதாகும்.
இந்தப் பணி பொறுப்பும் சிரமமும் மிகுந்தது. உரையாசிரியர் தமிழ் இலக்கண,
இலக்கியப் பயிற்சியுடையவராக இருந்துவிட்டால் மட்டும் போதாது. சைவ
சித்தாந்த சாஸ்திரப் பயிற்சியும் அவருக்கு இருக்கவேண்டும். அப்பொழுது
தான் விஷயங்களைத் திரிபின்றித் தெளிவாக விளக்க முடியும்.
தற்போது காஞ்சிப் புராணத்திற்கு உரை எழுதியுள்ள திரு. பொன்.
சண்முகனார்
அவர்களும், அவருடைய தந்தையாரான பொன். குமாரசுவாமி
அடிகளாரும் செந்தமிழ்ப் புலவர்கள்; சிறந்த சிவ பக்தர்கள். இந்த நூலின்
மூலம் அவர்கள் தமிழ் மொழிக்கும் , சைவ சமயத்துக்கும் அரிய
தொண்டாற்றியுள்ளார்கள். நூலுக்குச் சைவ அன்பர்களும் தமிழ்ப்
பெருமக்களும் பேராதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இந்தச் சீரிய முயற்சிக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
|
அன்புடன்,
எம்.
பக்தவத்சலம் .
|
|