xxxiii

பொருளி னோடுநற் சுற்றமும் பற்றிலர்க் 
கருளு நன்மைதந் தாயஅ ரும்பொருள்
சுருள்கொள் செஞ்சடை யான்கச்சி யேகம்பம்
இருள்கெ டச்சென்று கைதொழு தேத்துமே.      6

மூக்கு வாய்செவி கண்ணுட லாகிவந்
தாக்கும் ஐவர்தம் ஆப்பை அவிழ்த்தருள்
நோக்கு வான்நமை நோய்வினை வாராமே
காக்கும் நாயகன் கச்சியே கம்பனே.           7

பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை
பெண்ணொ டாணென்று பேசற் கரியவன்
வண்ண மில்லி வடிவுவே றாயவன்
கண்ணி லுண்மணி கச்சியே கம்பனே.          8

திருவின் நாயகன் செம்மலர் மேலயன்
வெருவ நீண்ட விளங்கொளிச் சோதியான்
ஒருவ னாய்உணர் வாய்உணர் வல்லதோர்
கருவுள் நாயகன் கச்சியே கம்பனே.           9

இடுகு நுண்ணிடை யேந்திள மென்முலை
வடிவின் மாதர் திறம்மனம் வையன்மின்
பொடிகொள் மேனியன் பூம்பொழிற் கச்சியுள்
அடிகள் எம்மை அருந்துயர் தீர்ப்பரே.         10

இலங்கை வேந்தன் இராவணன் சென்றுதன்
விலங்க லையெடுக் கவ்விர லூன்றலும்
கலங்கிக் கச்சியே கம்பவோ என்றலும்
நலங்கொள் செல்வளித் தானெங்கள் நாதனே.    11

திருச்சிற்றம்பலம்
சுந்தரமூர்த்தி நாயனார்
பண் -- தக்கேசி

திருச்சிற்றம்பலம்

ஆலந் தானுகந் தமுதுசெய் தானை ஆதி யைஅம ரர்தொழு தேத்தும் சீலந் தான்பெரி தும்உடை யானைச் சிந்திப் பாரவர் சிந்தையு ளானை ஏல வார்குழ லாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கால காலனைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்றவாறே.

உற்ற வர்க்குத வும்பெரு மானை ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப், பற்றி னார்க்கென்றும் பற்றவன் தன்னைப் பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானை, அற்றம் இல்புக ழாள்உமை நங்கை ஆத ரித்து வழிபடப் பெற்ற, கற்றை வார்சடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.