Lxiv
இதனால் விளங்குவது யாது? ஏற்றான் அடிக்கே இரவும் பகலும் பிரியாது
வணங்கும் அன்பர்க்கே வேதவேள்விகள் உரியன ; பயன் விளைப்பன
என்பதாம். புராணங்கள், அவ்வேத முதல்வன் குறி முதலியவற்றை விளங்க
உணர்த்தும் சிறப்புடையன. ஆதலின் அவற்றை ஓதின், ஓதுமவர் உள்ளத்தில்
அவன் திருவடி குடிபுகும் என்பது முக்காலும் உண்மை.
“ஞானத்தால் வீடென்றே நான்மறைகள் புராணம்
நல்ல ஆகமம் சொல்ல அல்லவாம் என்னும், ஊனத்தார் என்கடவர்” |
எனச் சிவஞான சித்தியாரிற் புராணம் நின்றவாற்றாலும் அச்சிறப்பு விளங்கும்.
“வேத முதல்வன் என்னும் மெய்த்திருப் பாட்டினினேர்
ஆதி யுலகோர் இடர்நீங்கிட ஏத்த ஆடும்
பாதம் முதலாம் பதினெண் புராணங்கள் என்றே
ஓது என்று உணரசெய்தனர் யாவும் ஓதாதுணர்ந்தார்” |
இது சேக்கிழார் பெருமானார் திருவாய்மொழி. இதற்கு அடியாகியது
திருக்கடைக்காப்புள் ஒன்றான திருப்பாசுரத்தின் எட்டாவது அருண்மொழி.
அஃதாவது
“வேதம் முதல்வன் முதலாக விளங்கி வையம்
ஏதப் படாமே உலகத்தவர் ஏத்தல் செய்யப்
பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே.’’ |
என்பது.
இது வையை யாற்றில் இட்ட ஏடு நீர் எதிர்ந்து சென்று நிறுவிய
துட்பட்டு ஞானம் ஈசன்பால் அன்பே என்ற ஞானம் உண்டார் திருவாக்கு.
ஆற்று நீர்ப் பெருக்கில் எதிர்ந்து சென்ற தன் உட்கிடையாகப் புராணம்
இருப்பதால், புராணம் சிவரூபம் ஆவதில் யாரேனும் ஐயம் உறலாமோ?
உற்றால், அவர்க்கு வானே நிலனே பிறவே உரியன ஆமோ?
“சூதன் ஒலிமாலை” என்றது சூத முனிவரால் உணர்த்தப் பெற்ற
புராணங்களை. தமிழில் உள்ள உயரிய புராணங்கள் எல்லாம் அவ்வொலி
மாலையின் உதிர்மலர்களே ஆகும். புராணங்களின் வேற்றுமை,
புராணார்த்தங்களின் வேற்றுமை, புராணங்கள் கூறும் தேவர்களின் வேறுபாடு,
புகழ்ச்சி யிகழ்ச்சிகள், புராணங்களின் தாற்பரியங்கள் எல்லாவற்றையும்
விசாரசாகரத்துள் (487,510-517) மிகத் தெளிவித்திருக்கும் உண்மையை அறிதல்
நன்று. நீலகண்ட பாடியத்தில், வேதம் சிவாகமம் இரண்டும் செய்த கருத்தன்
சிவன் ஒருவனேயாம் எனச் சுருதியும் புராணங்களும்
|