பதினைந்து ஆண்டுகள்
கழித்து இம்மூன்றாம் பதிப்பை தமிழ்ப்புத்தாண்டு நன்னாளாகிய இன்று வெளியிடுகின்றேன்.
இவ்வேலை தொடங்கிப்
பாதியளவில் இருக்கும் பொழுது மேற்காசிய நாடுகளில் போர் மூண்டது.
அரபு நாடுகள் எண்ணெய் விலையை அளவற்ற முறையில் உயர்த்தின. அதன்
காரணமாக எல்லாப் பொருள்களும் விலையேறின. அச்சுத்தாள்களின் விலை
மும்மடங்காயிற்று. அச்சுக்கூலி, கட்டடக் கூலி போன்ற பிறவும் உயர்ந்தன.
வரலாறு கண்டிராத பொருளாதார நெருக்கடியில் இப்பதிப்பு வெளிவருதல்
திருவருளின் துணை ஒன்று கொண்டேயாம்.
இப்பதிப்புக்கு
வேண்டிய தாள்களைப் பல இடங்களில் பலமுறை
சென்று தேடி அரும்பாடு பட்டுப் பெற்றும் நூலை அழகிய வடிவில்
அச்சிட்டும் உதவியுள்ள சென்னை - இராயப்பேட்டை - முருகன் அச்சகத்தின்
உரிமையாளர் சைவத்திரு - மு. நாராயணசாமி முதலியார் அவர்களுக்கு எனது
கடப்பாடுடைய நன்றி உரியதாகும்.
இந்நூலின்
எஞ்சிய பகுதியின் மறுபதிப்பும் விரைவில் வெளிவரத்
திருவருள் துணை செய்வதாக.
சேக்கிழார் நிலையம், |
இங்ஙனம்
: 14-4-75 |
கோயம்புத்தூர், |
க.
மங்கையர்க்கரசி |
|