திருக்கோவலூராதீனம் ஸ்ரீமத் ஞானியார் மடாலயம
ஸ்ரீலஸ்ரீ சிவஷண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்
சந்நிதி வீதி, திருப்பாதிரிப்புலியூர், யுவ ஆண்டு கன்னிமதி 22
சிவபெருமானது
அருட்டிறத்தினையும், அவ்வருட்டிறத்தினைப் பெற்று
இன்பமுற்ற அடியார் வரலாற்றினையும் அறிவிக்குந் தமிழ்ப்பேரிலக்கியம்
பெரிய புராணமாம் திருத்தொண்டர் புராணம்.
இந்நூற்குப்
பல அறிஞர்கள் முன்னர் உரை கண்டனர்.
உரை
காணும் வகை பலதிறத்தது. நம் அன்பர் திருவாளர் சி.
கே.
சுப்பிரமணிய முதலியார், பி.ஏ. அவர்கள் கண்டிருக்கும் உரைவகை சாலச்
சிறந்ததொன்றே. இவ்வுரை பண்டையோர் கொள்கையை அரண் செய்து
இக்காலத்தினர் கொள்கைகளுள் ஏற்பன கொண்டு மிளிர்கின்றது.
சொன்னயங்களும் பொருணயங்களும் இலேசினறிய எடுத்துக்
காட்டப்பட்டிருக்கின்றன. நூலுள் நுழைந்து கிடந்த சாத்திரக் கருத்துக்கள்
வெளிப்படுத்தப்பட் டிருக்கின்றன.
கற்பார்க்கு
வரும் ஐயங்களைத் தன்னுரை கொண்டும் பிற மேற்கோள்
கொண்டும் ஒழிக்கின்றது. திருமுறைகளினின்றும் வேறு பழைய
நூல்களினின்றும் காட்டப்படும் பகுதிகள் அசைக்க ஒண்ணா நிலையில்
அமர்ந்திருக்கின்றன. வேண்டும் இடங்களில் பொழிப்புரையும் பதவுரையும்
கருத்துரையும் குறிப்புரையுமாக விளங்குகின்ற திவ்வுரை.
இவ்வுரை
கண்ட இவர்களும் இவர்கள் முன்னையோரும் தமிழ்ப்
புலமையிலும் சிறந்து, சிவபூசை செய்வதிலும் சிறந்து, அடியார் பத்தி
முதலியவற்றிலும் சிறந்து மேன்மை அடைந்தவர்கள்.
இவ்வுரை
நூலுள் காணப்படும் படங்களோ இயற்கைக்கு மாறுபடா
அழகை உடையன. இவ்வுரை நூல் வடிவம் காண்பார் கண்ணைக் கவரும்
கவினைப் பெற்று ஒளிர்வது.
அச்சினிலை
இறும்பூது பயக்கும் இயல்பினது. |