29

சிவமயம்


திருச்சிற்றம்பலம்


உமாபதி சிவாசாரியர் அருளிச்செய்த
திருப்பதிக் கோவை


கோயிறிரு வேட்களநெல் வாயில்கழிப் பாலை குலவுபெரு மணமயேந்
திரப் பள்ளி முல்லை, வாயில்கலிக் காமூர்சாய்க் காடுதிருப் பல்ல,
வனீச்சரம்வெண் காடுவளர் திருக்காட்டுப் பள்ளி, தாயிலான் குருகாவூர்
காழிகோ லக்கா தருக்கிளர்புள்ளிருக்குவே ளூர்கண்ணார் கோயின்,
ஞாயிலியற் சடைமுடியே நின்றியூர் புன்கூர் நாடியநீ டூரன்னி யூர்வேள்விக்
குடியே, 1

கருதெதிர்கொள் பாடிமணஞ் சேரிதிருக் குறுக்கை கருப்பறிய
லூர்கதியே காட்டுகுரக் குக்கா, மருவும்வாழ் கொளிபுத்தூர் மண்ணிப்படிக்
கரையே வளருமோ மாம்புலியூர் கானாட்டு முள்ளூர், திருநாரை யூர்கடம்பூர்
பந்தணைநல் லூர்பொன் றிகழ்கஞ்ச னூர்கோடி காமங்கலக் குடியே,
திருப்பனந்தா ளாப்பாடி சேய்ஞலூர் திருந்து தேவன்குடி திருவியலூர்
திருக்கொட்டை யூரே.  2

இன்னம்பர் திருப்புறம் பயம்விசய மங்கை யியல்வைகா வூர்நல்வட
குரங்காடு துறையே, பின்னமறு பழனமை யாறுநெய்த் தானம் பெரும்புலியூர்
மழபாடி திருப்பழுவூர் கானூ, ரன்னவன்பி லாலந்துறை மாந்துறைபாற்
றுறையே யானைக்கா பைஞ்ஞீலி பாச்சிலாச் சிராம, மன்னுமீங் கோய்மலையி
னோடறுபான் மூன்றே வடகரையிற்பதி; தென்பால் வாட்போக்கி யாமே, 3

கடம்பந்துறை திருப்பராய்த்துறை கற்குடிமூக் கீச்சரங் கருதுதிருச்
சிராப் பள்ளி திருவெறும்பி யூரே, நெடுங்களமே லைக்காட்டுப் பள்ளியாலம்
பொழில்சீர் நிகழ் திருப்பூர் துருத்திகண்டி யூர்சோற்றுத் துறைமா, லடும்வேதி
குடிதென் குடித் திட்டை புள்ளமங்கை யணியார்சக் காப்பள்ளி யருங்கருகா
வூரே, படர்பாலைத் துறைநல்லூர் திருவாவூ ரதனிற் பசுபதீச் சரஞ்சத்தி
முற்றம்பட்டீச்சரமே, 4

ஆறைவட தளிதிருவ லஞ்சுழியே குடமூக் கதனிற்கீழ்க் கோட்டங்கா
ரோணநா கேச்சரங், கூறுமிடை மருதுகுரங் காடுதுறை நீலக் குடிவைகன்
மாடக் கோயி னல்லங்கோ மும்பஞ், சாறமரா வடுதுறைதண் டுருத்திதிரு
வழுந்தூர் சகம்புகழ்மா யூரம்விள நகர்பறிய லூரே, வீறுசெம்பொன் பள்ளிநனி
பள்ளிவலம் புரமே வியன்றலைச்சங் காடாக்கூர் விளங்குகட வூரே, 5

 

திருக்கடவூர் மயானமொடு திருவேட்டக் குடியே தெளிச்சேரி தருமபுர
கள்ளாறு கோட்டா, றுரைக்குமம்பர்ப் பெருந்திருக் கோயின்மா காள
முயர்மீயச் சூரிளங்கோ யிற்றிலதைப் பதிபூ, மருக்கமழ்பாம் புரநற்சிறு
குடிவீழி மிழலை வன்னியூர் கருவிலிமன் பேணுபெருந் துறையென்,
கருத்துடைக்கு நறையூர்ச்சித் தீச்சரத்தோட டரிசிற் கரைப்புத்தூர் சிவபுரமுங்
கலையநல்லூர் காணே. 6

கருக்குடிவாஞ் சியந்திருநன் னிலத்துப்பெருங் கோயில்
கவின்கொண்டீச் சாம்பனையூர் விற்குடிதென் புகலூ,ரிருக்கும்வர்த்த
மானேச்சர மிராமனதீச் சரமே யியல்பயற்றூர் செங்காட்டங் குடிமருக
லிருளே, முருக்குதிருச் சாத்த