33

திருச்சிற்றம்பலம்


கொற்றவன்குடி - உமாபதி சிவாசாரியார்


அருளிச் செய்த


திருமுறைகண்ட புராணம்

கருமுறை விண்டடி யவருயு மாறருள் கவுணியர் குலதீபந்
தருமுறை நாவுக்கரசா ரூரர் தாஞ்சே மித்திடுமத்
திருமுறை கண்ட புராண முரைக்கச் சிந்துர முகனற்றாள்
ஒருமுறை யிருமுறை மும்முறை வாழ்த்தி யுவந்தன் பொடுபணிவாம்.

வேறு

உலகமகிழ் தருசைய மீது தோன்றி யோவாது வருபொன்னி
சூழ்சோணாட்டின், றிலகமென விளங்குமணி மாட வாரூர்த் தியாகேசர்
பதம்பணிந்து செங்கோ லோச்சி, யலகில்புகழ் பெறுராச ராச மன்ன பையகுல
சேகரன்பாலெய்து மன்ப,ரிலகுமொரு மூவரருள் பதிக மொன்றொன்
றேயினிதி னுரை செய்ய வன்பாற் கேட்டு, 1

கையிரண்டு மூச்சிமே லேறக் கண்ணீர் கரைந்தோட மெய்ம்முழுதும்
புளகம் போர்ப்ப, வையன்மலர்ப் பதமுளத்தே கொண்டு போற்றி யரியமுறை
தேட வெங்கு மிலாமை யாலே, நையுமனத் தினனாகி யிருக்குங் காலை,
நாரையூரினிலாதி சைவமறை யோன்பால், வையமெலா மீடேறச் சைவம் வாழ
மாமணிபோலொருசிறுவன் வந்து தோன்றி, 2

வளமொடுப நயனவிதிச் சடங்கும் பூண்டு மறைமுதலாங் கலைபயின்று
வருநாளீன்ற, கிளர்மறையோ னோரூர்க்குச் செல்ல, மைந்தன் கேடில்பிதா
வுரைத்த மொழிப்படியே யந்தி, யிளமதிச்செஞ் சடைப்பொல்லாப் பிள்ளை
யாரை யேத்தியா ராதிப்பா னினிதி னேகி, யுளமலியன் பொடுதிருமஞ்
சனமுன் னாகு முரிய வெலாஞ் செய்து நிவே தனமுன் வைத்து, 3

எம்பெருமா னமுதுசெய் வேண்டு மென்ன விறைஞ்சிடவு மமுதுசெயா
திருப்பக் கண்டு, வெம்பியுள “மேதேனுந் தவறிங் குண்டோ? வேழமுக னே!
யடியே னிவேதித்திட்ட, பம்பமுத முண்ணாத தென்னை?“ யென்னப் பரிந்து,
தலை தனைமோதப் புகுங்கா, லெம்மா “னம்பி! பொறு“ வெனத்தடுத் தவ்
வமுத மெல்லா நன்கருந்த, வுவந்துநம்பி நவில்வதானான்; 4

“எந்தையே! யினியடியேன் பள்ளிக் கேகி லெங்கடே சிகனடிப்பா
னாதலாலே, சந்தமறை முதற்கலைக ணீயே யோதித் தரல்வேண்டு“மென,
வேழ முகத்தோன் றானு, மந்தமற வோதுவிக்க, வோதி நம்பி மகிழ்ந்தனனன்;
றதுபோல மற்றை நாளும், விந்தையொடு நிகழ, நம்பி யாண்டார் நம்பி
மேவியிருந் திடுஞ் செய்தி வேந்தன் கேளா, 5

“செல்வமிகு திருநாரை யூரின் மேவுஞ் சிவனளித்த மதகரிக்குச் சிந்தை
கூர்ந்து, “நல்லபுக ழுடையநம்பி யாண்டார் நம்பி நண்பினொடு நிவேதிப்பான்
மதுர மிக்க, வெல்லையில்வா ழைக்கனிதே னவலோ டப்ப மெள்ளுண்டை
யிவ்வுலகோ ரெடுக்க“ வென்றே, மல்லன்மிகு சேனையுட னிராச ராச
மன்னவனு மந்நகரில் வந்து சேர்ந்தான். 6

ஆங்கதனுக் கந்நகரி லிடம்போதாம லயல்சூழப் பதின்காத வகல
வெல்லை, மாங்கனிவா ழைக்கனிகள் வருக்கை யாவும் வந்தனவவ்
வெல்லையெல்லா மருவ