34

வைத்துப், பாங்கினுட னம்பிதாள் பணிந்து மன்னன் பலகனிகள் கொணர்ந்த
வெலாம் பகர்ந்து போற்றி, “யீங்கிதனைப் பொல்லாத
பிள்ளையாருக்கிப்பொழுதே நிவேதிக்க“ வென்று சொன்னான். 7

நம்பியா சன்சொன்ன வார்த்தை கேளா “ஈன்றுனது பணி“ யென்ன
வருளர லுன்னித், தும்பிமுக னடிபணிந்து “மன்னனிங்குத் தொகுத்தனநீ
யமுதுசெய வேண்டு“ மென்னக், கம்பமதக் களிற்றுமுகத் தானு மங்குக்
சருத்தினுட னம்பியுரைக் கிசைந்து காட்ட, விம்பரினில் வந்தனநாற் சுத்தி
செய்தே யிருந்த வெலாம் படைக்க, வவனேற்றல் செய்தான். 8

புகர்முதக்கை புறப்படவே படைத்த வெல்லாம் புகுந்தவிட மறியாமற்
போன பின்னை, யகநெகிழ மெய்யரும்பிக் கண்ணீர் வார. நம்பிகழ லன்பினா
லரசன் போற்றி, “மிகவுமொரு விண்ணப்ப மடியேற்குண்டு; வேதியனே!
கே“ளென்று விளம்பு வான் “மெய்ப், புகழதுசேர் மூவர்தமிழ் தொண்டர்
செய்தி பூதலத்தில் விளங்க“வெனப் போற்றி நின்றான். 9

அந்தவுரை கேட்டலுமங் கரசன் றன்னை நம்பிமகிழ்ந் தருள்புரிவா
“னருள் சேர் மூவர், செந்தமிழ்க ளிருந்தவிட, மன்ப ருள்ளோர் செய்திக்கவ்
விநாயகன்றாள் சிந்தித் தெந்தா, யந்தவகை யேதென்று கேட்டா லெந்தை
மகிழ்ந்தருளு மந்நெறியை வழாது னக்குத், தந்திடுவன் மன்ன!பொறு“ வென்று
சொல்லித் தந்திமுகன் சந்நிதியிற் றாழ்ந்து சென்றான். 10

சென்று பணிந் திபமுகத்தோன் பாதப் போதைச் சென்னியில்வைத்
தவனருளிற் றிளைத்துச் சிந்தை, யொன்றுமற வுருகி, விழி தாரைகொள்ள,
வுண்மையினால் வந்தித்தங் குவாவோன் றன்னை, ‘யின்றமிழ்சேர் மூவர்தமி
ழிருந்த வெல்லை, யெல்லையில்சீர்த் திருத்தொண்டரியல்பு மூர்த்தி!,
நன்றுமருள் செய்தருள வேண்டு“ மென்ன, நாகமுக னம்பிக்கு நவில
லுற்றான். 11

வார்ந்தருட்க ணீர்சொரிய நம்பி கேட்ப “வண்டமிழ்க ளிருந்தவிட
மன்றுளாடுங், கூர்ந்தவிருட் கண்டர்புறக் கடையின் பாங்கர்க் கோலமலர்க்
கைகளடையாள மாகச், சார்ந்தன“ வென் றருள்செய்து, தொண்டர்பேறுஞ்
சாற்றுதலாற், சகதலத்தோ ரருளைச் சார, வார்ந்ததமி ழிருந்தவிட, மன்பர்
செய்தி, யத்தனையு நம்பிமனத் தருளிற் கொண்டார். 12

கொண்டுகுல சேகரனாங் கோன்பால் வந்து, குஞ்சரத்தோ னருள்செய்த
கொள்கை யெல்லா, மண்டுபெருங் காதலுடன் சொல்லி, யந்த வண்டமிழின்
பெருமைதனை வகுத்துச் சொல்வார், “கண்டபெரு மந்திரமே மூவர்பாடல் கை
காணா மந்திரங் கண்ணுதலோன் கூற, லெண்டிசையுஞ் சிவனருளைப்
பெறுதற்காக லிம்மொழியின் பெருமையையா னியம்பக் கேணீ! 13

“சேடர்மலி காழீநகர் வேந்தர்தாமுந் தேவர்புகழ் திருத்தோணிச்
சிவனார் பங்கிற், பீடுடைய வுமைமுலைப்பா னருளாலுண்டு பிஞ்ஞகனைச்
சினவிடைமேற் பெருகக்கண்டு, தோடுடைய செவியன்முதற் கல்லூ ரென்னுந்
தொடைமுடிவாப் பரசமயத் தொகை கண்மாளப், பாடினார் பதிகங்கள் பாவி
லொன்றாம் பதினாயிர முளதாப் பகரு மன்றே. 14

திருநாவுக் கரையரெனுஞ் செம்மை யாளர் தீயமணர் சிறைநீங்க
வதிகை மேவுங், குருநாமப் பரஞ்சுடரைப் பரவிச் சூலை கொடுங்கூற்றா
யினவென்ன வெடுத்துக் கோதி, லொருமானைத் தரிக்குமொரு வரையுங்
காறு மொருநாற்பத் தொன்பதினா யிரம தாகப், பெருநாமப் புகலூரிற் பதிகங்
கூறிப் பிஞ்ஞகனா ரடியிணைகள் பெற்று ளாரே. 15