மன்னனுக்கு நம்பிக்கு
மறையவர்மூ வாயிரவர்
பன்னரிய திருத்தொண்டர் பலதுறையோர்க் குங்கேட்க
வின்னருண்முன் வியந்துரைத்த விவண்முதலா விசைத்தவிசை
தென்னிலமேன் மிகத்தோன்றத் திருவருளாற் றோன்றியதாம். |
34 |
|
|
சொன்னட்ட பாடைக்குத்
தொகையெட்டுக் கட்டளையா;
மின்னிசையாற் றருந்தக்க ராகத்தேழ் கட்டளையாம்;
பன்னுபழந் தக்கரா கப்பண்ணின் மூன்றுளதா;
முன்னரிய தக்கேசிக் கோரிரண்டு வருவித்தார். |
35 |
|
|
மேவுகுறிஞ்
சிக்கஞ்சு; வியாழக்குறிஞ் சிக்காறு
பாவுபுகழ் மேகராகக் குறிஞ்சிப்பா லிரண்டு;
தேவுவந்த விந்தளத்தின் செய்திக்கு நான்; கினிய
தாவில்புகழ்க் காமரத்தின் றன்மைதனக் கிரண்டமைத்தார். |
36 |
|
|
காந்தார
மாகிய பியந்தையாங் கட்டளைக்கு
வாய்ந்தவகை மூன்றாக்கி, வன்னட்ட ராகத்திற்
கேய்ந்தவகை யிரண்டாக்கிச், செவ்வழியொன் றாக்கி யிசைக்
காந்தார பஞ்சமத்தின் கட்டளைமூன் றாக்கினார். |
37 |
|
|
கொல்லிக்கு
நாலாக்கிக், கவுசிகத்துக் கூறும்வகை
சொல்லிலிரண் டாக்கி, மிகு தூங்கிசைநேர் பஞ்சமத்திற்
கொல்லையினி லொன்றாக்கிச், சாதாரிக் கொன்பதாப்,
புல்லுமிசைப் புறநீர்மைக் கொன்றாகப் போற்றினார். |
38 |
|
|
அந்தாளிக்
கொன்றாக்கி, வாகீச ரருந்தமிழின்
முந்தாய பலதமிழுக் கொன்றொன்றா மொழிவித்து,
நந்தாத நேரிசையாங் கொல்லிக்கு நாட்டிலிரண்,
டுந்தாடுங் குறுந்தொகைக்கோர் கட்டளையா விரித்துரைத்தார்.
|
39 |
|
|
தாண்டகமாம்
பாவுக்கோர் கட்டளையாத் தாபித்தங்
காண்டகையார் தடுத்தாண்ட வையரரு டுய்யமுறைக்
கீண்டிசைசேரிந்தளத்துக் கிரண்டாக வெடுத்துரைத்து,
நீண்டதக்க ராகத்துக் கிரண்டாக நிகழ்வித்தார். |
40 |
|
|
கூறரிய நட்டரா கத்திரண்டு, கொல்லிக்கு
வேறுவகை மூன்றாக, மிகுந்தபழம் பஞ்சுரத்துக்
கேறும்வகை யிரண்டாக்கி, யின்னிசைதேர் தக்கேசிப்
பேறிசையா றாக்கி, யதிற் காந்தாரம் பிரித்திரண்டாம். |
41 |
|
|
ஒன்றாகுங்
காந்தார பஞ்சமத்துக்; கோரிரண்டா
நன்றான சீர்நட்ட பாடைக்கு நவின் றுரைக்கிற்
குன்றாத புறநீர்மைக் கிரண்டாகுங்; கூறுமிசை
யொன்றாகக் காமரத்துக் கொன்றாகப் போற்றினார். |
42 |
|
|
உற்றவிசைக்
குறிஞ்சிக்கோரிரண்டாக வகுத்தமைத்துப்,
பற்றரிய செந்துருத்திக் கொன்றாக்கிக், கவுசிகப்பாற்
நூற்றவிசை யிரண்டாக்கித், தூயவிசைப் பஞ்சமத்துக்
கற்றவிசை யொன்றாக்கி, யரனருளால் விரித்தமைத்தார்.
|
43 |