மல்குபுகழ்
வன்றொண்ட ரருளா லீந்த
வளமருவு திருத்தொண்டத் தொகையின் வாய்மை
நல்கும்வகை புல்கும்வகை நம்பி யாண்டார்
நம்பிதிரு வந்தாதி நவின்ற வாற்றாற்
பல்குநெறித் தொண்டர்சீர்ப் பரவ வல்ல
பான்மையா ரெமையாளும் பரிவால் வைத்த
1செல்வமிகுந் திருத்தொண்டர் புராண மேவுந்
திருத்துபய னடியேனுஞ் செப்ப லுற்றேன். |
1 |
|
|
சுந்தரமூர்த்தி நாயனார் |
தண்கயிலை
யதுநீங்கி, நாவ லூர்வாழ்
சைவனார் சடையனார் தனய னாராய்,
மண்புகழ் வருட்டுறையா னோலை காட்டி
மணம்விலக்க, வன்றொண்டா, யதிகை சேர்ந்து,
நண்பினுட னருள்புரிய, வாரூர் மேவி,
நலங்கிளரும் பரவைதோ ணியந்து வைகித்,
திண்குலவும் விறன்மிண்டர் திறல்கண் டேத்துந்
திருத்தொண்டத் தொகையருளாற் செப்பி னாரே.
|
2 |
|
|
சப்பலருங்
குண்டையூர் நெல்ல ழைத்துத்,
திருப்புகலூர்ச் செங்கல்செழும் பொன்னாச்
செய்து
தப்பின்முது குன்றர்தரும் 2பொருளாற் றிட்டுத்,
தடத்தெடுத்துச், சங்கிலிதோள் சார்ந்து,
நாத
னொப்பிறனித் தூதுவந், தாறூடு கீறி,
யுறுமுதலை சிறுமதலை யுமிழ் நல்கி,
மெய்ப்பெரிய களிறேறி, யருளாற் சேர
வேந்தருடன் வடகயிலை மேவி னாரே. |
3 |
|
தில்லைவாழந்தணர் |
நல்லவா
னவர்போற்றுந் தில்லை மன்று
ணாடகஞ்செய் பெருமானுக் கணியார், நற்பொற்
றொல்லைவான் பணியெடுத்தற் குரியார், வீடுந்
3துறந்தநெறி யார், தொண்டத்
தொகைமுன் பாடத் |
|
பாடபேதம்
- 1செல்வமலி. 2 பொன். 3துறந்தநிலையார்.
|