44

யந்தமிலப் பூதிமக னரவு மாற்றி,
     யருட்காசு பெற்று, மறை யடைப்பு நீக்கிப்,
புந்திமகிழ்ந் தையாற்றிற் கயிலை கண்டு,
     பூம்புகலூ ரான்பாதம் பொருந்தி னாரே.
25
   
         குலச்சிறை நாயனார்
கோதில்புகழ் தருமணமேற் குடியார், கோவண்
     குலச்சிறையார், தென்னர்குல வமைச்சர், குன்றா
மாதவர்க ளடிபரவு மரபார், பாண்டி
     மாதேவி யாரருள்வான் பயிர்க்கு வேலி,
காதன்மிகு கவுணியர்கோன் வாதிற் றோற்ற
     கையரைவை கைக்கரைசேர் கழுவி லேற்று
நீதியினா, ராலவாய் நிமலர்ச் சேர்ந்த
     நின்மலனா, ரென்மலங்க ணீக்கி னாரே.
26
   
           பெருமிழலைக்குறும்ப நாயனார்
கொண்டல்பனி வளர்சோலை மிழலை நாட்டுக்
     கோதில்புகழ்ப் பெருமிழலைக் குறும்ப னார், சீ
ரண்டர்பிரா னடியவருக் கடியா ராகு
     மாதரவா லணுக்கவன் றொண்டர்க் காளாய்,
மண்டொழுமெண் டருசித்தி வாய்ந்து ளார்தாம்,
     வன்றொண்டர் வடகயிலை மருவு நாண்மு
னெண்டிகழு மறைமூல நெறியூ டேகி,
     யிலங்கொளிசேர் வடகயிலை யெய்தி னாரே.
27

காரைக்காலம்மையார்

தங்குபுகழ்க் காரைக்கால் வணிகன் மிக்க ததைத்தன் றரும்புனித வதியார்,
மாவின், செங்கனிக டிருவருளா லழைப்பக், கண்டு திகழ்கணவ னதிசயித்துத்
தேச நீங்க. வங்கவுட லிழந்து, முடி நடையா லேறி, “யம்மையே!“ யெனநாத,
“னப்பா“ வென்று பொங்குவட கயிலைபணிந், தாலங் காட்டிற் புனிதனட
மனவரதம் போற்றி னாரே. 28;

அப்பூதியடிக ணாயனார்

அந்தமினற் றிங்களூர் வருமப்பூதி யருமறையோர், திருநாவுக் கரசி னாமம்
பந்தரிடை யெழுதக், கண் டரசு மெய்தப், பணிந்து, பரி கலநேடிப் படப்பை
சேர்ந்த, மைந்தனுயி ருயர்கதலி யிலைமேற் றுஞ்சும் வாளரவு கவர, வுடன்
மறைத்தல் கேட்டுச் சிந்தைமகிழ்ந் துயர்பதிக மருந்தாற் றீர்த்துத் திருவமுது
செய, வருளைச் சேர்ந்துளாரே. 29

திருநீலநக்க நாயனார்

நீதிதரு மறையோர்வாழ் சாத்த மங்கை நீலநக்க ரயவந்தி நிமலர் மேனி,
யூதிவிழுஞ் சிலம்பிகடிந் தவளை நீத்தார்க், குமியாத விடநாத னுறுநோய்
காட்டக், காதன்மிகு மனைவியையு மகிழ்ந்து மேவிக், காழியர்கோ
னமுதுசெயக் களித்து வாழ்ந்து, வேதிகையிற் பாணனார்க் கிடமு நல்கி,
விளங்குபெரு மணத்தரனை மேலி னாரே. 30

நமிநந்தியடிக ணாயனார்

நண்ணுபுகழ் மறையோர்வா ழேமப் பேறூர் நமிநத்தி யடிகடிரு விளக்கு நல்க
வெண்ணெயமணர்கள்விலக்க, நீரா லாரூரிலங்குமர னெறி யாருக் கேற்று
நானிற்