கண்ணமணர் கெடக்,
கண்பெற் றடிகள் வாழக், காவலனா னிபந்தங்கள்
கட்டுவித்தே, யண்ணலருள் கண்டாரு ரமர்ந்து 'தொண்டர்க் காணி' யெனு
மரசினருளடைந்துளாரே. 31
திருஞானசம்பந்தமூர்த்தி
நாயனார் |
காழிநகர்ச்
சிவபாத விதயர் தந்த
கவுணியர்கோ னழு, துமையான் கருதி யூட்டு
மேழிசையி னமுதுண்டு, தாளம் வாங்கி,
யிலங்கியநித் திலச்சிவிகை யிசைய வேறி,
வாழுமுய லகனகற்றிப், பந்த ரேய்ந்து,
வளர்கிழிபெற், றரவின்விட மருகற் றீர்த்து,
வீழிநகர்க் காசெய்தி, மறைக்கதவம் பிணித்து,
மீனவன்மே னியின்வெப்பு விடுவித் தாரே. |
32 |
|
|
ஆரெரியிட்
டெடுத்தவே டவைமுன் னேற்றி,
யாற்றுலிடு 1மேடெதிர்போ யணைய
வேற்றி,
யோரமண ரொழியாமே கழுவி லேற்றி,
யோதுதிருப் பதிகத்தா லோட மேற்றிக்,
காருதவு மிடிபுத்தன் றலையி லேற்றிக்,
காயாத பனையின்முது கனிக ளேற்றி,
யீரமிலா வங்கமுயி ரெய்த வேற்றி,
யிலங்குபெரு மணத்தரனை யெய்தி னாரே. |
33 |
|
|
ஏயர்கோன்கலிக்காம
நாயனார் |
ஏதமில்வே
ளாளர்பெரு மங்க லத்து
ளேயர்கோன் கலிக்காம ரிறையை நேரே
தூதுகொளு மவனணுகி லென்னா மென்னுந்
துணிவினர்பா, லிறைவனருஞ் சூலை யேவி
வேதனைவன் றொண்டன்வரி னீங்கு மென்ன,
வெகுண்டுடல்வாள் கொடுதுறந்து, மேய 2நாவற்
போதகமு முடலிகழ, வெழுந்து, தாழ்ந்து,
போற்றி,யது விலக்கி,யருள் பொருந்தி னாரே.
|
34 |
|
|
திருமூல
நாயனார் |
கயிலாயத்
தொருசித்தர், பொதியிற் சேர்வார்
காவிரிசூழ் சாத்தனூர் கருது மூலன்
பயிலாரோ யுடன்வீயத், துயர நீடும்
பசுக்களைக்கண், டவனுடலிற் பாய்ந்து, போத
அயலாகப் பண்டையுட; லருளான் மேவி
யாவடுதண் டுறையாண்டுக் கொருபா வாகக்
குயிலாரு மரசடியி லிருந்து, கூறிக்,
கோதிலா வடகயிலை குறுகி னாரே. |
35 |
|
|
தண்டியடிகணாயனார் |
திருவாரூர்
வருந்தண்டி யடிகள், காட்சி
சேராதார், குளந்தொட்டற் கமணர் சீறிக்
குருடா! நீ முன்செவிடுங் கூடிற், றென்று
குறித்தறியைப் பறித்தெறியக், கொதித்துத்,
தங்க |
|
பா
- ம் - 1 ஏடெதிரே. 2 நாவற்போதகம் - திருநாவலூரர்.
|