ணருளாலே விழித்,
தெவரு மந்த ராக,
வமணர்கலக் கம்பலகண், டவர்கள் பாழிப்
பருவான கற்பறித்,தா விக்கரையுங் கட்டிப்,
பரனருளா லமருலகம் பற்றி னாரே. |
36 |
|
|
மூர்க்க
நாயனார் |
தொண்டைவள
நாட்டுவளர் வேற்காட் டூர்வாழ்
தொல்லுழவர், நற்சூதர், சூது வென்று
கொண்டபொருள் கொண்டன்பர்க் கமுத ளிக்குங்
கொள்கையினார், திருக்குடந்தை குறுகி யுள்ளார்,
விண்டிசைவு குழறுமொழி வீணர் மாள
வெகுண்டிடலான் முர்க்கரென விளம்பு நரம
மெண்டிசையு மிகவுடையா, ரண்டர் போற்று
மேழுலகு முடனாளு மியல்பி னாரே. |
37 |
|
|
சோமாசிமாற
நாயனார் |
அம்பர்நக ரந்தணர்சோ
மாசி மாற,
ரன்பர்களாம் யாவர்க்கு மன்பினமு தளிப்பா,
ரும்பர்நிகழ் வகையாமம் பலவுஞ் செய்யு
முண்மையினா, ரைந்தெழுத்து மோவா நாவார்,
நம்பர் திகழ் திருவாரூர் நயந்து போற்று
நாவலர்கோ னடிபரவு நன்மை யாலே
யிம்பர்தொழ வும்பர்பணிந் தேத்த மேலை
யேழுலகு முடனாளு மியல்பி னாரே. |
38 |
|
|
சாக்கிய
நாயனார் |
சங்கமங்கை
வரும்வேளாண் டலைவர், காஞ்சிச்
சாக்கியரோ டியைந், தவர்தந் தவறுஞ் சைவத்
துங்கமலி பொருளுமுணர்ந், தந்த வேடந்
துறவாதே, சிவலிங்கந் தொழுவோர், கண்டோ
ரங்கன்மலர் திருமேனி யழுந்தச் சாத்தி,
யமருநாண் மறந்தொருநா ளருந்தா தோடிச்
செங்கலெறிந் திடுமளவின், மகிழ்ந்த நாதன்
றிருவருளா லமருலகஞ் சேர்ந்து ளாரே. |
39 |
|
|
சிறப்புலி
நாயனார் |
திருவாக்கூ ரருமறையோ,
ருலக மேத்துஞ்
சிறப்புலியார், மறப்புலியா ருரிமேற் செங்க
ணரவார்த்தார் வருமேற்றார்க் கன்ப ரானார்க்
கமுதளிப்பா, ரொளிவெண்ணீ றணிந்த மார்பர்,
பெருவாக்கான் மறைபரவி யாகம் போற்றும்
பெற்றியினா, ரைந்தெழுத்தும் பிறழா தோதிக்
கருவாக்கா விறைவன்றா ளிணைகள் சேர்ந்த
கருத்தினா, ரெனையாவுந் திருத்தி னாரே. |
|
|