48

       புகழ்ச்சோழ நாயனார்

பொழின்மருவுங் கருவூர்வாழ் புகழார் சோழர்,
     “போதகம்போ லென்னுயிரும் போக்கு“ மென்றே,
யழலவிர்வாள் கொடுத்தபிரா, னதிக மான்றே
     லடர்ந்தபெரும் படையேவ லவர்கொண் டேய்ந்த
தழல்விழிகொ டலைகாண்பார், கண்ட தோர்புன்
     சடைத்தலையை முடித்தலையாற் றாழ்ந்து வாங்கிக்,
கழல்பரவி, யதுசிரத்தி னேந்தி, வாய்ந்த
     கனன்மூழ்கி, யிறைவனடி கைக்கொண் டாரே.
46

           

              நரசிங்கமுனையரைய நாயனார்

நாடுபுகழ் முனைப்பாடி நாடு மேய நரசிங்க முனையர், புவி நயந்து, மன்று,
ளாடுமவ ராதிரைநா ளடியார்க் கம்பொ னமுதளிப்பா, ரொளிவெண்ணீ
றணிந்து தூர்த்த, வேடமுடை யவர்க்கிரட்டிச் செம்பொ னீந்து, விடுத், தழகா
ராலயங்கள் விளங்கச்செய்து, தோடலர்தா ருடையபிரா னருளை யாளத்
தோன்றினா, ரெனை யருளி னூன்றி னாரே. 47

               அதிபத்த நாயனார்
அலையாருங் கடனாகை நகருள் வாழு மதிபத்தர், பரதவர்க ளதிபர், வேலை
வலைவாரி வருமீனிற் றலைமீ னீசன் வார்கழற்கே யென்றுவிடு மரபார்,
பன்னாட் டலையான தொருமீனே சார, நாளுந் தந்தொழிலால்விடுத்து, மிடி
சாரச், செம்பொ னிலையாரு மணிநயந்த மீனொன் றெய்த, நீத், தருளா
லிறைவனடி நேர்ந்துளாரே.

              கலிக்கம்ப நாயனார்
கடவுளருட் கண்ணார்கள் பயிலுந் தொல்லைக் கடந்தைநகர்,
வணிகர்கலிக்கம்ப, ரன்பர்க், கடிமையுற வமுதளிப்பா, ரடியா னீங்கி
யருளுருவா யன்பருட னணைய வேத்தி, யிடையிலவ ரடியிணையும் விளக்கா
நிற்ப, விகழ்மனைவி கரகமலி யிரண்டு கையும், படியில்விழ வெறிந்,
தவன்செய் பணியுந் தாமே பரிந்து, புரிந்தானருளே பற்றி னாரே. 49

 

           கலிய நாயனார்
தடமதில்சூ ழொற்றியூர் நகருள் வாழுஞ்
     சக்கரப்பா டியர்குலமெய்த் தவமா யுள்ளார்,
படர்புகழார் கலியனார், நலியுங் கூற்றைப்
     பாய்ந்த வர்க்கு விளக்கெரிக்கும் பரிவான் மற்றோ
ருடலிலராய்ச், செக்குழல்வார்க், கதுவு நேரா,
     துயர்மனைவி யைக்கொள்வா ருளரு மின்றி,
மிடறுதிர மகனிறைய வரிய, நாதன்
     வியன்கைகொடு பிடிப்ப, வருண் மேவி னாரே.
50
   
         சத்தி நாயனார்
விரிதருகா விரிநாட்டு வரிஞ்சை யூர்வாழ்
     வேளாளர், சத்தியார், விமலர் பாதத்
துரியவர்க ளடிபரவு மொருமை யார், நா
     வோவாமே யைந்தெழுத்து முரைக்கு நீரா,
ரிருளின்மிட றுடையபிரா னடியார் தம்மை
     யிகழ்வார்நாத் தண்டாயத் திடுக்கி வாங்கி
யரியுமது திருத்தொழிலா வுடையார், மன்று
     ளரடியசே வடிநீழ லடைந்து ளாரே.