ஐயடிகள்காடவர்கோனாயனார்
வையநிகழ் பல்லவர்தங்
குலத்து வந்த மாமணி, மா நிலமுழுது மகிழ்ந்து
காக்கு, மையடிகள் காடவர்கோ, னருளா னூல்க ளறிந்,தரசு புரிந்திடுத
லமையு மென்றே, பொய்யனைய வுடல்வாழ்வு கழியு மாறு பொருந்தியிடும்,
புகழ்வெண்பாப் புலியூர்மேவுஞ், செய்யதிரு வடிமுதலாப் பதிக டோறுஞ்
செப்பினா, ரென்வினைக டப்பி னாரே. 52 கணம்புல்ல
நாயனார்
இலகுவட வெள்ளாற்றுத்
தென்பால் வாழு மிருக்குவே ளூரதிப, ரெழிலார்
சென்னிக், கலைநிலவா ரடிபரவுங் கணம்புல்லர், தில்லைக் கருதுபுலீச்
சரத்தாற்குக் காதற் றீப, நிலைதரத்தா மிட, மிடியா லொருநாட் புல்லா
னீடுவிளக் கிட, வதுவு நேரா தாகத், 1தலைமயிரி னெரிகொளுவு மளவி,
னாதன் றாவாத 2வாழ்வருளுந் தன்மை யாரே. 53
காரி
நாயனார் |
திருக்கடவூர்
வருமுரவோர், காரி யாரந்
திகழ்தொண்டர், வண்டமிழ்நூ றிருந்த வோதி
விருப்பொடுதம் பெயராற்பா விளம்பி, மும்மை
வேந்தரையு முறைமுறையே மேவி, யங்க
ணுரைத்தவுரை நயமாக்கி, யவர்பா லேய்ந்த
வொண்பொருளா லாலயங்க ளோங்கச் செய்து,
தரைக்குளருந் தவர்க்கேவ றகமுன் போற்றுந்
தன்மையா லருள்சேர்ந்த நன்மை யாரே.
|
54 |
|
|
நின்றசீர்நெடுமாற
நாயனார் |
கன்னன்மலி
நெல்வேலிக் கவினார் மாறர்,
கவுரியர்கோ, னமணருறு கலக்க மெல்லாம்
பொன்னெயில்சூழ் சிரபுரக்கோ னணைய மாற்றிப்,
புனிதமிகு நீறணிந்து, போற்றி செய்து,
மன்னுபுகழ் மங்கையருக் கரசி யாரா
மலர்மாது மணிபார்ப மகிழ்ந்து, மாற்றார்
வெந்நிடுதல் கண்,டரசு புரிந்து, காழி
வேந்தரருள் சேர்ந்தபெரு விறலி னாரே. |
55 |
|
|
வாயிலார்
நாயனார் |
ஞாயிலார்
மதிற்றொண்டை நாட்டு மேன்மை
நண்ணுமயி லாபுரியின் வேளாண் டொன்மை
வாயிலார், மலைவில்லா னடியே போற்றி,
மறவாமை தலைநின்ற மனமே செம்பொற்
கோயிலா, வுயர்ஞானம் விளக்கா, நீராக்
குலவியவா னந்த, மன்பே யமுதாக் கொண்டு,
தாயிலா னிருகரண நிகழ வேத்துந்
தன்மையா, ரருள்சேர்ந்த நன்மை யாரே. |
56 |
|
|
முனையடுவார்
நாயனார் |
பொன்னி
வளந் தருநாட்டுப் புகழு நீடூர்ப்
பொருவிறிரு மலிவேளாண் டொன்மை மிக்கார்,
முன்னியவர் முனையடுவா,ரிகலார் போரின்
முரணழிவார் தமக்காக மொழிந்த கூலி |
|
பா
- ம் - 1தலையின் மயிர். 2 வரமருளுந் தகைமையோரே.
|