55

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

கொற்றவன்குடி - உமாபதி சிவாசாரியார்


அருளிய


சேக்கிழார் புராணம்


என வழங்கும்


 திருத்தொண்டர் புராண வரலாறு

பாயிரம்


காப்பு

வெண்பா

திருமருவுங் குன்றத்தூர்ச் சேக்கிழார் செல்வ
வருண்மொழித் தேவர்புரா ணஞ்சீர் - வருவதற்கு
மைம்மா மழைபோன் மதத்தான் றிரண்டபுழைக்
கைம்மா வதனத்தான் காப்பு.

விநாயகர் துதி
வானுலகு மண்ணுலகும் வாழமறை வாழப்
பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
ஞானமத வைந்துகர மூன்றுவிழி நால்வா
யானைமுக னைப்பரவி யஞ்சலிசெய் கிற்பாம்.
1
   
சபாநாதர்
சீராருஞ் சதுர்மறையுந் தில்லைவா ழந்தணரும்
பாராரும் புலிமுனியும் பதஞ்சலியுந் தொழுதேத்த
வாராருங் கடல்புடைசூழ் வையமெலா மீடேற
ஏராரு மணிமன்று ளெடுத்ததிரு வடிபோற்றி.
2
   
சிவகாமசுந்தரி
பரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய விருணீங்கச்
சிரந்தழுவு சைவநெறித் திருநீற்றி னொளிவிளங்க
வரந்தைகெடப் புகலியர்கோ னமுதுசெயத் திருமுலைப்பால்
சுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல்போற்றி.
3
   
கற்பக விநாயகர்
 
மலரயனுந் திருமாலுங் காணாமை மதிமயங்கப்
புலிமுனியும், பதஞ்சலியுங் கண்டுதொழப் புரிசடையார்
குலவுநடந் தருந்தில்லைக் குடதிசைக்கோ புரவாயில்
நிலவியகற் பகக்கன்றி னிறைமலர்த்தா ளிணைபோற்றி.
4
   
சுப்பிரமணியர்
பாறுமுக முப்பொருந்தப் பருந்துவிருந் துணக்கழுகு
நூறுமுக மாயணைந்து நூழில்படு களம்புகுத