மாறுமுகந்
தருநிருதர் மடியவடி வேலெடுத்த
ஆறுமுகன் றிருவடித்தா மரையிணைக ளவை போற்றி. |
5 |
|
|
சைவசமயாசாரியர்கள் |
பூழியர்கோன்
வெப்பொழி்த்த புகலியர்கோன் கழல்போற்றி;
ஆழிமிசைக் கன்மிதப்பி லணைந்தபிரா னடிபோற்றி;
வாழிதிரு நாவலூர் வன்றொண்டர் பதம்போற்றி;
ஊழிமலி திருவாத வூரர்திருத் தாள்போற்றி. |
6 |
|
|
திருத்தொண்டத்தொகையடியார்
- சேக்கிழார் |
தில்லைவா
ழந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாந் திருத்தொண்டத் தொகையடியார் பதம்போற்றி;
ஒல்லையவர் புராணகதை யுலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழா ரடிபோற்றி. |
7 |
|
|
நூற்பெயர் |
|
தாய்மலர்ந்த
முகத்தினளாய்த் தழுவிமுலை தரவந்த
நோய்மலர்ந்த பிறவிதொறு நுழையாம லுலகுய்யத்
தீமலர்ந்த சடைக்கூத்தர் திருவருளாற் சேக்கிழார்
வாய்மலர்ந்த புராணத்தின் வரலாறு விரித்துரைப்பாம். |
8 |
|
|
அவையடக்கம் |
1ஊர்க்கடலை
யிவனெனவந் துதித்தநா னோங்குதமிழ்
நூற்கடலைக் கரைகண்டு நுவலநினைக் குமதுதிருப்
பாற்கடலைச் சிற்றெறும்பு பருகநினைப் பதுபோலும்;
நீர்க்கடல்சூழ் மண்ணுலகை நிறுக்கநினைக் குமதொக்கும்.
|
9 |
|
|
2தேவுடனே
கூடியசொற் செழுந்தமிழோர் தெரிந்துரைத்த
பாவுடனே கூடியவென் பருப்பொருளும் விழுப்பொருளாங்;
கோவுடனே கூடிவரும் குருட்டாவு மூர்புகுதும்;
பூவுடனே கூடியநார் புனிதர்முடிக் கணியாமல்.
|
10 |
பாயிரம்
முற்றிற்று
பாலாறு வளஞ்சுரந்து
நல்க, மல்கும் பாளைவிரி மணங்கமழ்சூழ்
சோலைதோறுங் காலாறு கோலியிசை பாட, நீடு களிமயினின் றாடுமியற்
றொண்டை நாட்டு ணாலாறு கோட்டத்துப் புலியூர்க் கோட்ட நன்றிபுனை
குன்றைவய நாட்டுமிக்க சேலாறு கின்றவயற் குன்றத்தூரிற் சேக்கிழார்
திருமரபு சிறந்த தன்றே. 11
நாடெங்குஞ் சோழன்முனந் தெரிந்தே யேற்று நற்குடிநாற்
பத்தெண்ணாயிரத்து வந்த, கூடல்கிழான் புரிசைகிழான் குலவுசீர்வெண்
குளப்பாக்கி ழான் வரிசைக் குளத்துழான், றேடுபுக ழாரிவருஞ் சிறந்து வாழச்,
சேக்கிழார் குடியிலிந்தத் தேச முய்யப், பாடல்புரி யருண்மெழித்தே வரும்,பி
னந்தம் பாலறா வாயரும்வந் துதித்து வாழ்ந்தார் முன். 12
1
ஊர்க்கடலை - சாம்பற்புழுதி எனவும், ஓங்கு தமிழ் நூல்கடல் -
பெரிய புராணம் எனவும் கூறுவர்.
2 தேவுடனே கூடியசொற் செந்தமிழோர்.
தெய்வத்தன்மை வாய்ந்த
தமிழ் வாண ராகிய சேக்கிழார். தெரிந்துரைத்த பா - பெரியபுராணம்.
பருப்பொருள் - அற்பப்பொருள்.
|