58

திருப்பேர் சாற்றி, யம்புவியி லங்காங்க வைப வங்கட் கானபரி கலந்திருநாள்
பூசை கற்பித், திம்பர்புகழ் வளவனர சுரிமைச் செங்கோலிமசேது பரியந்த
மியற்று நாளில். 19

1கலகமிடு மமண்முருட்டுக் கையர் பொய்யே
     கட்டிநடத் தியசிந்தா மணியை மெய்யென்
றுலகிலுளோர் சிலர்கற்று, நெற்குத் துண்ணா
     துமிகுத்திக் கைவருந்திக், கறவை நிற்க
மலடுகறந் துளந்தளர்ந்து, குளிர்பூஞ் சோலை
     வழியிருக்கக் குழியில்விழுந் தளறு பாய்ந்து,
விலைதருமென் கரும்பிருக்க விரும்பை மென்று,
     விளங்கிருக்க மின்மினித் தீக் காய்ந்த வாறே.
20
   
வளவனுங்குண் டமண் 2புரட்டுத் திருட்டுச் சிந்தா
     மணிக்கதையை மெய்யென்று வரிசை கூர
வுளமகிழ்ந்து பலப்படப்பா ராட்டிக் கேட்க,
     வுபயகுல மணிவிளக்காஞ் சேக்கி ழார்கண்,
டிளவரசன் றனை நோக்கிச், “சமணர் பொய்ந்நூ
     லிது; மறுமைக் காகா; திம் மைக்கு மற்றே;
வளமருவு கின்றசிவ கதையிம் மைக்கு
     மறுமைக்கு முறுதி“யென, வளவன் கேட்டு.
21
   
“அவகதையாய்ப் பயனற்ற கதையீ தாகி,
     லம்மையுமிம் மையுமுறுதி பயக்கத் தக்க
சிவகதையே; ததுகற்ற திறமைப் பேரார்?
     சீவகசிந் தாமணிபோ லிடையில் வந்த
நவகதையோ?; புராதனமோ?; முன்னூ லுண்டோ?;
     நானிலத்துச் சொன்னவரார்?; கேட்ட பேரார்;
தவகதையோ?; தவம்பண்ணிப் பேறு பெற்ற
     தனிக்கதையோ?; வடைவுபடச் சாற்று“ மென்றான்.
22
   
செம்பியர்பூ பதிமகிழ்ந்து வினவிக் கேட்கச்
     சேக்கிழார் குரிசிலுரை செய்வார் “ஞாலத்
தம்பலவர் திருத்தொண்டர் பெருமை யாரூ
     ரடிகண்முத லடியெடுத்துக் கொடுக்க, நாவ
னம்பிபதி னொருதிருப்பாட் டாகச் செய்த
     நலமலிதொண் டத்தொகைக்கு, நாரை யூரிற்
றும்பிமுகன் பொருளுரைக்க, நம்பி யாண்டார்
     சுருதிமொழிக் கலித்துறையந் தாதி செய்தார்.
23

1 உயர்ந்த சைவ சமயமிருக்கத் தாழ்ந்த சமண சமயத்தினுள் தாம்
புகுந்தமைக்கு எடுத்துக்காட்டாக இப்பாட்டிற் காட்டிய பழமொழிகளை அப்பர்
சுவாமிகள் தமது திருவாரூர் - காந்தாரம் - பழமொழித் திருப்பதிகத்தினுட்
காட்டி யருளியிருத்தல் குறிக்க.

2 மெய்ப்பயன் குறியாத சரிதமாதலின் புரட்டு என்றும், சில
வேதவிருத்தம் நீக்கி, கொல்லாமை பொய்யாமை முதலாக அதிற்கூறும்
அறங்கள் எமது புராண இதிகாசங்களில் முன்பு உள்ளனவே யாதலின்,
திருட்டு என்றுங் கூறினார் - என்பர் ஸ்ரீமத் -ஆறுமுகத் தம்பிரான்
சுவாமிகள்.