ரிருமைநெறி
வேளாளர் பதின்மூவ,ரிடைய
ரிருவர்,சாலியர் - குயவர் - தயிலவினை யாளர்
-
பரதவர் - சான்றோர் - வண்ணார் - சிலைமறவர் - நீசர் -
பாண -ரிவ ரோரொருவ ராம்; பகருங் காலே.
|
36 |
|
|
அறுதிபெறத்
திருமரபு குறித்துரையாப் புராண
மவைகளொரு பதின்மூன்று; திருக்கூட்டந் தன்னின்,
மறுவிலவர் பதியறிந்த கதையிரண்டு - வந்த
மரபறிந்த கதையிரண்டு - பேரறிந்த கதையொன்
-
றுறுமரபு தெரியாப்பு ராணமவை யோரே -
ழூரறியாக் கதையேழு - பேரறியாக் கதையெட்
-
டிறுதியிலக கங்கண்ட திருக்கூட்ட மொன் - றெண்
1ணித்தனையென் றறியாத திருக்கூட்ட
மெட்டே. |
37 |
|
|
தில்லைமறை
யோர்கலயர் முருகர்பசு பதியார்
சிறப்புலியார் கணநாதர் பூசலைசண் டேசர்
கல்விநிறை சோமாசி மாறர்நமி நந்தி
கவுணியனா ரப்பூதி நீலநக்க ராகச்
செல்வமறை யோர்காதை பதின்மூன்று; சிவவே
தியர்காதை யிரண்டுபுகழ்த் துணையார்முப் போதும்
வல்லபடி சிவனையருச் சிப்பார்கண்; மாமாத்
திரர்மரபிற் சிறுத்தொண்ட ரொருவர்; முடி
மன்னர், |
38 |
1
தில்லைவாழந்தணர் புராணமும் திருவாரூப்பிறந்தார் புராணமும்
பதியறிந்த கதையென்றும், தில்லைவாழந்தணர் புராணமும் முப்பொழுதுந்
திருமேனி தீண்டுவார் புராணமும் மரபறிந்த கதையென்றும், கபிலர் பரணர்
முதலாக நாற்பத்தொன்மருக்கும் பெயர் கூறப்படுதலில், பொய்யடிமையில்லாத
புலவர் புராணம் பேரறிந்த கதை யென்றும், மேற்குறித்த மரபறிந்த
தொகையடியார் புராணம் இரண்டு நீக்கி ஏனைய தொகையடியார் புராணம்
ஏழும் மரபறியாக் கதையென்றும், மேற்கூறிய பதியறிந்த கதை இரண்டு நீக்கி
ஏனைய தொகையடியார் புராணம் ஏழும் ஊரறியாக் கதையென்றும்,
பொய்யடிமையில்லாத ‘புலவர் புராண நீக்கி ஏனைய தொகையடியார் புராணம்
எட்டும் பேரறியாக் கதையென்றும், தில்லைமூவாயிரவர் எனத் தொகை
கூறப்படுதலின் அவர் புராணம் இறுதியிலக்கங்கண்ட புராணம் என்றும்,
ஏனைய எட்டுந் தொகை காணாமையின் எண்ணித்தனை யென்றறியாத
திருக்கூட்டமெனவுங் கொள்க. கடைச் சங்கத்தார் நாற்பத்தொன்பதின்மரென்று
இலக்கங் கூறப்படுதலின் அவரை இலக்கங் காணத் தொகையோடு சேர்த்த
தென்னெனின் ஆண்டுச் சங்க மிருந்தாரேயன்றி அச்சங்கத்துச் சிவபிரான்மேற்
பல பாடற்றிரட்டைப் பாடி அரங்கேற்றிய புலவரும் அடங்கலில் தொகைகூற
அமையாமையினென்க - ஸ்ரீமத் ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள் உரை.
சங்கத்தார் நாற்பத்தொன்பதின்மர் என்றது கடைச்சங்கப் புலவோர்
ஆசனத்தொகை. இவர்கள் பல காலத்து மிருந்தவர். அன்றியும் இவருள்ளே
சமணர் முதலிய புறச்சமயிகளுமிருந்தனர். அவர்கள் அரன்பாற்
பொய்யடிமையில்லாத புலவராகார். இதனானும் இவர்கள் இலக்கங்காணாத்
தொகையடியார் என்பதாம். கபிலர் பாணர் முதல் எனத் திருவந்தாதியிற்
கூறிய பெயர்களை ஆசிரியர் சேக்கிழார் இவர் புராணத்துக் குறித்துக்
கூறாமையே கொண்டு இப்புலவராவார் திருவாதவூரடிகள் என்று
சாதிப்பாருமுளர். சேக்கிழார் கருத்து அஃதன்று என்பது உமாபதி சிவனார்
அருளிய புராணசாரப் பாட்டானும் அறியப்படும்.
|