67

பாடினர் தும்புரு நாரதர்; நீடிசை பாடாநின்
றாடினர் வானி லரம்பைய; ரஞ்சலி யெஞ்சாமற்
சூடினர் மண்ணின் மடந்தைய; ரெந்தை துணைப்பாதந்
தேடினர் மாலய; னன்பர் நடந்தரி சித்தார்கள்.
72
 
சங்கொடு பேரி கறங்கிசை வீணை தனித்தாளம்
வங்கிய கான மிடக்கை கடக்கை மணிக்காளம்
பொங்கிய பம்பை வலம்புரி சுண்டை முதற்பொற்பார்
மங்கல தூரிய மெங்கு முழங்கி வனப்பெய்த.
73
 
வேதியர் வேள்வி நெடும்புகை, யாலய மெங்கெங்குங்
காதிய குங்குலி யப்புகை, நீடு கருப்பாலைச்
சோதி நெடும்புகை, தோரண வீதி தொறுந்தோறு
மாதர் புகைக்கு மகிற்புகை, யெங்கும் வனப்பெய்த.
74
 
ஆடக நாடக சாலைகள், முத்தணி யத்தாணி,
மேடை யரங்கு, களங்க மிலாத வெளிக்கூட,
மாட, மதிட்கள, மாளிகை, சூளிகை, யெங்கெங்குந்
தோடவிழ் மாலைகள் 1பொன்னரி மாலைகள் சூழ்வித்தார்.
75
 
பழுதக லத்திரு வலகு விருப்பொடு பணிமாறிக்
குழைவு பெறத்திகழ் கோமய நீர்குளி ரச்செய்து
தழைபொதி தோரண முங்கொடி யுந்துகி லுஞ்சார்வித்
தழகு பெறத்திரு வீதி புதுக்கி யதன்பின்பு.
76
   
வேறு
 
   
2திருநெ றித்தமிழ் வல்ல பேர்கள், சிவாக மங்கள் படித்தபேர்,
கருநெ றிப்பகை ஞான நூல்பல கற்ற பேர், மறை கற்றபேர்,
குருநெ றிக்குரி யோ,ரி லக்கண விலக்கி யங்கள குறித்தபேர்,
பெருநெ றிப்பல காவி யங்கதை பேச வல்லவ ரனைவரும்,
77
   

வேறு

 
வள்ளலார் திருநடஞ்செய் மன்றின் முன்றின்
     மறையவர்கோ மயசலத்தான் மெழுகித் தாபித்
தெள்ளரும்வெண் சுதையொழுக்கி யறுகாற் பீட
     மிட்டதன்மேற் பசும்பட்டு விரித்து மீதே
வெள்ளைமடித் திட்டுமது மலருந் தூவி
     விரைநறுந்தூ பங்கொடுத்தா தனங்கற் பித்துத்
தெள்ளுதமிழ்ச் சேக்கிழார் புராணஞ் செய்த
     திருமுறையை யதன்மேல்வைத் திறைஞ்சிப் போற்றி;
78
 
“வாழிதிருத் தொண்டர்புரா ணத்தை நீரே
     வாசித்துப் பொருளருளிச் செய்வீ“ரென்று
சோழர்பெரு மான்முதலா மடிய ரெல்லாஞ்
     சொலக்கேட்டுக், குன்றைமுனி மன்று ளாடுந்
 

1 பொன்னரிமாலை - பொன்னை மலரிதழ்போலரிந்து தொடுத்தமாலை.

2 திருநெறித் தமிழ் - தேவாரத் திருமுறைகள்.