1துறஞ்சி
றந்தமட பதிக ளுந்,தொடர வந்து, மன்னனரி
பிரமர்பான்
மறைஞ்சு நின்றபொருள் வெளிப்ப டக்கனக மன்றி னின்றபடி
கண்டனன்.
|
62 |
|
|
கண்ட கண்ணருவி
தாரை கொள்க, விரு கைக ளஞ்சலிகொ
ளக்,கசிந்,
தெண்ட ரும்புளக ரோம கூபமெழ, வின்ப வாரிகரை புரள,
வாய்
விண்ட தூமொழிகள் குழற, வன்பினொடு விம்மி விம்மியருண்
மேவிடத்,
தெண்ட னாகமுன் விழுந்,தெ ழுந்து, நனி செம்பி யன்பரவ,
வெம்பிரான்.
|
63 |
|
|
சேக்கி
ழானமது தொண்டர் சீர்பரவ, நாம கிழ்ந்துலக
மென்றுநம்
வாக்கி னாலடியெடுத் துரைத்திட, வரைந்து நூல்செய்து
முடித்தனன்;
காக்கும் வேல்வளவ! நீயி தைக் கடிது கேளெ னக்கனக
வெளியிலே
யூக்க மானதிரு வாக்கெ ழுந்தது திருச்சி லம்பொலியு முடனெழ. |
64 |
|
|
மன்று ளாடிதிரு
வாய்ம லர்ந்தமொழி யுஞ்சி லம்பொலியு
மன்றிலே
நின்ற மானிடர் செவிப்பு லன்புக நிறைந்த, தன்றியு நிலத்தின்மே
2லொன்றி நின்றுயர் சராச ரங்களடை யக்க சிந்துருகி யோலிடக்,
குன்றி லங்குதிர டோண ரேந்த்ரபதி குதுகு லித்துள
மகிழ்ந்தனன்.
|
65 |
|
|
தொண்டர்
தொண்டுசெய் புராண காதைமதி சூடு நாதர்திரு
வருளினால்
விண்ட நீதிபுனை சேக்கி ழார்முனி விரித்து ரைத்தகதை
கேட்பதற்
கண்ட வரணரடி யாரெ லாங்கடுக வருக வென்றுதிசை
திசைதொறு
மெண்ட யங்கரச னேடெ டுத்தெழுதி யாளு மோலைகளு
மேவினான்.
|
66 |
|
|
வேறு
|
|
|
|
கவச மணிந்த
சனங்களு மிங்கித முங்கம்பித்
தவச முறுஞ்சிவ சிந்தையு, மன்பக லாமேன்மைத்
தவசரிதத்தொழி லுஞ்,சிவ சாதன முஞ்,சாரச்
சிவச மயத்தவர் யாவரும் வந்து திரண்டார்கள். |
67 |
|
|
வேதியர் வேத
முழக்கொலி, வேதத் தைத்தமிழா
லோதிய மூவர் திருப்பதிகத் தொலி, யோவாமற்
பூதிய ணிந்தர கரவென வன்பர் புகழ்ந்தோதுங்
காதியல் பேரொலி, காரொலி போலொலி கைத்தேற. |
68 |
|
|
பூசிப் பவர்சிலர்;
பூசித் தன்பொடு புனிதன்றா
ணேசிப் பவர்சிலர்; பிறவா வரமரு ணிமலாவென்
றியாசிப் பவர்சிலர்; திருமுறை யெழுதிக் களிகூர
வாசிப் பவர்சில; ராக விருந்து மகிழ்ந்தார்கள். |
69 |
|
|
தெள்ளு திரைக்கடன்
மீது மிதந்த திருத்தோணி
வள்ளலை யன்புசெ யன்பர் மடங்க டொறும்பாலர்
மெள்ள விருந்து மிழற்று புராண விருத்தத்தைக்
கிள்ளைகள் பாடியு ரைப்பன; கேட்பன மெய்ப்பூவை. |
70 |
|
|
மற்றது கண்டு
களித்த நலத்த மனத்தோடு
சுற்றிய மந்திரி மாரொடு தந்திரி மார்சூழத்
தெற்றென வந்து திரண்டு முரண்டரு சீர்நாடு
பெற்றது செல்வ மெனத்தனி யோகை பெருந்தார்கள். |
71 |