சேண்டகைய திருத்தொண்டர்
புராணமெனப் புராணத்
திருமுறைக்குத் திருநாமஞ் சீர்மைபெற வமைத்திட்,
டாண்டகைமை பெறவெழுதி, மைக்காப்புச் சாத்தி,
யழகுபெறக் கவளிகையு மமைத்ததில்வைத் ததன்பின், |
53 |
சேவை காவலர் புராண காதைதொகை செயநி னைந்தெமை
யகன்றபின்
இயாவர் தாமரு கிருந்த பேர்கள்? கதை சென்ற தெவ்வள?வி
ருந்ததெங்?
காவதென்? னிதைக ளறிய வேண்டும தறிந்து வாருமென
வளவர்கோ
னேவி னானுரிய தூதர்; தூதரறி யாம லொற்றரையு மேவினான். |
54 |
|
|
வென்றி வேள்வளவ
னளவ றிந்துவர விட்ட காளையர்
புராணநூல்
ஒன்று பாதிகதை சென்ற தென்றுசில ரோடி னார், சில
ருவந்துசென்
றின்று நானைமுடி யும்பு ராணமினி யென்று ரைத்திட,
விறைஞ்சினான்;
சென்று நற்கதை முடிந்த தென்றுசிலர் செம்பி யற்குறுதி
செப்பினார்.
|
55 |
|
|
வந்து சொன்னவர்க
ளனைவ ருக்குநவ மணிக ளுந்துகிலு
மம்பொனுஞ்
சிந்தி யள்ளியு முவந்து வீசி, யுயர் செம்பொ னம்பல
மருங்கில்வா
ழந்தி வண்ணர்நட மும்ப ணிந்து, முத லடியெ டுத்தவர்
கொடுத்திடப்
புந்தி செய்துமகிழ் சேவை காவலர் புராண முந்தொழு
வனானெனா,
|
56 |
|
|
வீதி வீதிக
டொறுந்தொ றும்பயண மென்று வென்றிமணி
முரசறைந்,
தோதி, வேதியர்க ளெண்ணி யிட்டவுயர் நாளு மோரையு
முகூர்த்தமும்
போத நாடி, வரை புரைக டக்களிறு புரவி தேர்கருவி யாடரச்
சாது ரங்கமுட னேசெ லப்பிளிறு தந்தி மேல்கொடு நடந்தனன்.
|
57 |
|
|
தேர்மு
ழக்கொலி, மழைக்க டக்கரட சிந்து ரக்களிறு பிளிறுசீ
ரார்மு ழக்கொலி, பரிச்செ ருக்கொலி, பதாதி வந்தெதி
ரடர்ந்தெழும்
போர்மு ழக்கொலி, சழக்கி லாதுயர் படைக்க லண்புணரு
மோசை,
யேழ்
கார்மு ழக்கொலியி னெட்டி ரட்டிநிறை கடன்மு ழக்கென
முழக்கெழ. |
58 |
|
|
வளவர்
கோன்வர வறிந்து தில்லைமறை யோரும் வண்மைமட
பதிகளும்
பிளவு கொண்டமதி நுதன்ம டந்தையரு மற்று முள்ளபெரி
யோர்களுங்
களவி லாதமொழி கொடுபு ராணகதை செய்த கங்கைகுல
திலகருந்
தளவ மாலையப யனையெ திர்ந்தினிய சார வாசிபல சாற்றினார். |
59 |
|
|
முண்ட
மானதிரு முடியு, மிட்டதிரு முண்டமுங், கவச
முந்துணைக்
1குண்ட லங்களு, மிரண்டு காதினும் வடிந்த லைந்தகுழையுந்,
திருக்
கண்ட மாலைகர மாலை யுஞ்சிரசு மாலை யுங்,கவின்
விளங்கவே
தொண்டர் சீர்பரவு வான ணைந்தசுப சரிதை சோழனெதிர்
கண்டனன்
|
60 |
|
|
கண்ட
போதுள மகிழ்ந்து, தன்னையறி யாது, கைகடலை மீதுறக்,
கொண்ட வேடமர னடியர் வேடமிது குறைவி லாததவ
வேடமென்
றண்ட வாணர்திரு வருளை யுன்னி,யவ ரடிமை கொண்டபெரு
மையைநினைந்,
தெண்ட யங்கரச ரேறு சேவையர் குலாதி பாதுகை
யிறைஞ்சினான். |
61 |
|
|
இறைஞ்சி
யம்பலவர் பாத தாமரை யிறைஞ்ச வெண்ணி,வன்
முறைமையா
லறஞ்சி றந்தமுனி சேவை காவலரு, மாறைஞ், ஞூறுமறை
யோர்களுந், |
|
1
குண்டலம் - ஆறு உருத்திராக்கங்கள் சேர்த்தமைத்த காதணி. குழை
- மணியிழைத்து வட்டமாய்ச் சதுரப்பாட்டுடன் அமைத்த காதணி. சரிதை -
செயல்.
|