78

ஆசிரியரது வழி வழியாரே அமைச்சர்கள்

அவர் பெருமையினை உட்கொண்டு, அரசர் அவரது தம்பியார்
பாலறாவாயரைத் தமது அமைச்சராகக் கொண்டனர். அதன்பின்பு வந்த
சோழ அரசர்களும் அவர்களது வாழையடி வாழையாய் வமிச பரம்பரையில்
வந்த பெருமக்களையே தமது அமைச்சர்களாகக் கொண்டு அரசு செலுத்தினர்
என்றும், அவ்வமைச்சர்கள். இவ்வுலகங் காவல் பூண அரசர்க்கு
அமைச்சராயின மட்டில் அமையாது, திருத்தொண்டர் புராணத்தையும்
அவ்வவ் வரசர்களுக்கு உபதேசித்து வருதல் பின்னாட் பல நூறு
ஆண்டுகள்வரை மரபாயிருந்தது என்றும், சேக்கிழார் சுவாமிகளுக்கு
ஏறக்குறைய இருநூறாண்டுகளின் பின் வாழ்ந்த உமாபதியார் திருவாக்கினா
லறிகின்றோம்.

  

   “..........சேக்கிழார், வாச லன்றுமுத லின்று காறுமினி மேலும் வாழையடி
வாழையாய், வீசு தென்றன்மணி மண்டபத்தரசு வீற்றிருக்குமுடி யரசருக்,
கீசனன்பர்கள் புராண முஞ்சொலி, யமைச்சு மாகி, நல மெய்துமால்“ என்பது
திருத்தொண்டர் புராண வரலாறு. இதில் இனிமேலும் என்றதனால் சோழ
அரசர்கள் இதனை நியதியான மரபாகக் கையாண்டனர் என்றும் தெரிகின்றது.

நாயனார்க்குத் திருநாகேச்சரம் ஆன்மார்த்த தலமானது

     திருநாகேச்சரவீசரிடத்துப் பாரய்க் கடனெறியினின்ற நல்வினைப்
பயனால் இவர், தாயார், இவரையும், இவரது இளவலாகிய பாலறாவாயரையும்
பெற்றெடுத்தார் என்றும், அதனாலும் பின்னர்ப் பல நிகழ்ச்சிகளின்
தொடர்பினாலும் இவர் அவ்விறைவரையே தமது ஆன்மார்த்தமாகக்
கொண்டு நேசித்துப் பூசித்தனர் என்றும் ஊகிக்க இடமிருக்கின்றது. “மாநரக
மருஞ்சித்த மலர்க்கமலத் தாள் வணங்கி, நாணாளும் பரவுவார் பிணிதீர்க்கும்
நலம்போற்றி“ (திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் - 412) என்ற
குறிப்பும், உமாபதி சிவத்தின் திருவாக்கும் இதற்கு ஆதாரந்தருகின்றன. அமைச்சராகிய பின் திருநாகேச்சரத்தைத் தமது வாசத்தலமாகக் கொண்டு
பல நாளும் வழிபட்டு அங்குத் திருப்பணிகள் செய்தனர் என்று கொள்ள
இடமிருக்கின்றது. அத்தலத்தே இவரது தாயாரும் தாமும் தம்பியுமாக உள்ள
திருவுருவங்கள் திருக்கோயிலினுள்ளே தாபிக்கப்பெற்று இந்நாளும்
பூசிக்கப்படுகின்றன.

காலம்

     குன்றத்தூரிற் சேக்கிழார் சுவாமிகளது வீடு இருந்த இடத்தில்
இப்போது அவரது கோயில் அமைக்கப்பட்டிருக்கின்றது. அவர் வாழ்ந்த
காலம் இப்போதைக்கு ஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகளின்முன் என்று
கொள்ளப்படுகின்றது. புராணம் பாடுவித்த அநபாயச் சோழர் முதலாவது
குலோத்துங்கர் என்ற கொள்கை முன் நிலவியிருந்தது. இப்போது
அக்கொள்கை வலியுறாது, அவர் இரண்டாங் குலோத் துங்கரே என்றும்,
அவரது காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி என்றும் உள்ள
கொள்கை சரித ஆராய்ச்சி வல்ல பல அறிஞர்களாலும், அரசாங்கக் கல்
வெட்டுப் பரிசோதனை அதிகாரிகளாலும் பற்பல ஏதுக்களால் வலியுறுத்தப்
பெறுகின்றது. இவ்விரு கொள்கையுமே யன்றி அநபாயர் என்பவர்
கங்கைகொண்ட சோழர் ஆவர் என்று கொள்வாரும் உண்டு. இந்நாள்
அறிஞர் பலரும் ஆதரிக்கும் கொள்கையின்படி பார்த்தால்,
கலிங்கத்துப்பரணி பாடிய செயங்கொண்டார் சேக்கிழார் சுவாமிகளுக்கு
முன்னும், ஒட்டக்கூத்தர் அவருடனும், கம்பர் அவர்க்குப் பின்னும் இருந்த
புலவராவர்கள்.

புராணத்தின் ஆதாரங்கள்

 சேக்கிழார் சுவாமிகள் புராணம் பாடுதற்கு முதனூல் திருத்தொண்டர்த்
தொகை. வழிநூலும் வகைநூலுமாகியது நம்பியாண்டார் நம்பிகள் அருளிய
திருத்தொண்டர் திருவந்தாதி. மேலும் இப் புராணத்திற்கும் பேராதரவாகவும்
அடிநிலையாகவுமுள்ளன மூவர் முதலிகள் அருளிய திருநெறித் தமிழாகிய
தேவாரம் முதலிய அருணூல்கள். ஆசிரியர் அவற்றை முற்றும்
ஆய்ந்துணர்ந்து அவற்றுட் கண்ட உண்மைகளை