குறிப்பு:-
இங்குக்காட்டிய சுவடிப்படங்கள் பல அரிய பொருள்களை
விளக்குகின்றன. 1? அங்குல அகலமுள்ள ஓலையிதழின் ஒருபுறத்திற் பத்துச்
செய்யுட்களும், முதலிலுங் கடையிலும் அவ்வப்புராணங்களின் பெயரும்,
செய்யுட் கடையிலக்கங்களும், கொண்டு புராணமுடிந்தவிடத்துத்
திருச்சிற்றம்பலம் என்றெழுதியுமுள்ளன. ஒரு பக்கத்தில் 27 வரிகளும், மற்ற
பக்கம். 26 வரிகளுமாக எழுத்துக்கள் ஒன்றோடொன்றுசேராமலும் வரிகள்
பிறழாமலும் எழுதப்பட்டன. இடப்புறம் புராணத் தலைப்புக்குப் பக்க இடம்
விட்டுத் தனியாக எழுதப்பட்டுளது. கோல் துளைக்கும் இடம் விடப்பட்டது.
இது என் அருமைத் தந்தையார் வைத்துப் போற்றி யிருந்த ஏட்டுச் சுவடியின்
ஒர் இதழ். 48 ஆண்டுகளின் முன்னர் அவர் தனது 51-வது வயதிற் சிவகதி
பெற்றனர். எனவே இச்சுவடி இற்றைக்கு ஒரு நூறு ஆண்டுகளின் முன்
எழுதிப் போற்றப்பட்டதென்று கூறலாம். கல்விநிலை, எழுத்துநிலை, தமிழில்
ஆர்வநிலை, சுவடி போற்றுநிலை முதலியவை அந்நாள் நின்ற உயர்வும்
நேர்மையும் இது கொண்டு ஒருவாறு தெரியலாம். இந்நாள் அச்சிற்றானும்
சிறிய இடத்தில் இத்தகைத்தாய்ப் பொறிக்க இயலாமை காணலாம். இவ்வருஞ்
சுவடி என் வீட்டிலிருந்தும் எனது பேதைமையாலும் கவனக் குறைவாலும்
தீவினையாலும் முழுதும் சிதலுக்கிரையாயிற்று. நான் அறிந்து தேடும்போது
மிகச் சில இதழ்களே முழுதும் பகுதிகளுமாகக் கிடைத்தன.
இச்சுவடி யிதழினா
லறியப்படும் பொருள்கள் :- (1) பத்தராய்ப்
பணிவார் புராணத்து இறுதியில் 4141 என்று குறிந்துள்ளது. 4286
பாட்டுக்களுள்ள பதிப்புச் சுவடிகளில், மேற் கண்ட இடத்துச் செய்யுள் 4154
ஆகிறது. எனவே அதுவரை பின் வந்தார் 13 செய்யுட்கள் இடைச் செருகல்
செய்தனர் என்று கூறக் காரணமுண்டு.
(2) பத்தராய்ப்பணிவார் சருக்கம் ஒவ்வொரு புராணமும்
பொதுவாக
ஒவ்வொரு திருப்பாட்டா னமைந்துள்ள தென்பது இவ்விதழிற் காணலாகும்.
பரமனை - புரா - தென்றமிழும்.... (1); சித்தத் - புரா - காரணபங்கயம்...
(1); திருவாரூர் - புரா - திருக்கயிலை... (1); முப்போ - புரா -
எப்போதுமினிய... (1); தெரிந்து.... (2) காரணற்கும்..
(3); அப்பாலும்
- புரா - மூவேந்தர்.... (1) செற்றார்தம்...(2);
என்ற எட்டுச் செய்யுட்களே
காணப்படுகின்றன. எனவே இச்சருக்கத்தில் பின்வந்தவர் சேர்த்த இடைச்
செருகல்கள் அச்சுப் பிரதிகளிற் கண்ட புரமூன்றும் அருவாகி
தெரிந்துணரின் ஆதார அம்பலத்தே
ஆரணிய அடவிபடு
இந்தவகை என்ற எட்டுச் செய்யுட்களாம் என்னலாம்.
(3) அன்பர்கள் நேரே கண்டு கொள்ளுமாறு இவ்விதழ்களின்
படம்
இங்குப்பதித்தேன். ஆர்வத்தோடும் இதற்குதவி செய்த என் நண்பர்
திருத்துறையூர் - திரு. ஆறுமுக நாயனார்க்கு
என் நன்றி உரியது.
|