மலைக்குலக்கொடி 1141;
அகிலமீன்றளித்த மாது 1143; கோதி லாவமு
தனையவள் 1144; மாது 1142; வண்டுவார்குழல் மலைமகள் 1145; பிறப்பொழிப்பாள் 1146;
காளமேக மொப்பாள் 1156; அந்தமில்லறம் புரப்பவள்
1260; ஆண்டநாயகி 1161; திருமறைகள் ஒலிக்குந் தெய்வ, வண்காஞ்சி யல்குல்
மலைவல்லி 1163; கொந்தலர்பூங் குழலியமக் கொம்பு 1164; நிறைதவஞ்செய்
இமையப்பாவை 1170; துணைவி 1203; தேவர்கடம் பிராட்டி 1227.
உருத்திரசோலை
- 1161. காஞ்சிபுரத்தில்உள்ள அற்புதத் தானங்களுள்
ஒன்று.
உருத்திரம்
- 1030. திருவுருத்திரம். வேதங்களின் சரி நடுவில் உள்ள
மந்திரப் பகுதி. பக்கம் - 1342 பார்க்க. அருமறைப் பயனாகிய உருத்திரம்
1037; உருத்திரம் 1036, 1039; வேதமந்திரம் 1038.
உலகாணி
- 1150. திருக்காமக்கோட்டத்தில் உள்ள அற்புதத்
தீர்த்தங்களுள் ஒன்று. (பக்கம் - 1479)
எச்சதத்தன்
- 1215. விசாரசருமனாரென்னும் சண்டீசரின் தந்தை.
எயினனூர்
- 608. ஏனாதிநாத நாயனாருடைய ஊர். தலவிசேடம்
பார்க்க. (பக்கம் 823)
எரி
- 797. தீக்கடவுள்.
எறிபத்தர்
- 551, 556, 570, 591, 594, 604, 607. அறுபத்துமூன்று
நாயன்மார்களுள் ஒருவர்.
எழுத்தஞ்சும்
- 1214. ஸ்ரீபஞ்சாட்சரம் - சிவமூலமந்திரம்.
ஏயர்பெருமான்
- 881. ஏயர்கோன்கலிக்காம நாயனார்.
அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவர். ஏயர்கோனார் 884. கலிக்காமர்
899. ஏயர்குலமன்னவனார் 900. மானக்கஞ்சாறரது புதல்வியாரின் கணவனார்.
ஏனாதிநாதனார்
- 609, 614, 618, 632, 644, 649. ஏனாதிநாதர் 607;
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர்.
ஐயரே!
- 1070. திருநாளைப்போவாரைத் தில்லைவாழந்தணர்
விளித்தது.
ஐயர்
- 719. திண்ணனார். (2) இறைவனார் 776.
கஞ்சாறூர்
- 866. தலவிசேடம் (பக்கம் 1161) பார்க்க. கஞ்சாறு 871.
கடைகாப்போர்
- 577. அரசரது அரண்மனை வாயிற்காவலர்.
கணமங்கலம்
- 903. அரிவாட்டாய நாயனாரது ஊர். தலவிசேடம்
(பக்கம் 1190) பார்க்க.
கம்பைமாநதி
- 1137. தொண்டை நாட்டின் ஆறுகளுள் ஒன்று.
காஞ்சிபுரத்தின் தீர்த்தங்களுள் ஒன்று. (பக்கம் 1460)
கரிகாற்
பெருவளத்தோன் - 1162. பெரும்புகழ்கொண்ட சோழ
அரசர். காஞ்சிபுரத் திருநகரங்கண்டவர். இமயமலையில் புலிக்கொடி
நாட்டியவர்.
கருநாடர்
- 978. கானக் கடிசூழ் வடுகக் கருநாடர் காவன் மன்னன்
978; 991. தமிழ்நாட்டின் வடக்கில் கருமண் ணிலப்பரப்புள்ள தேசம் கருநாடு
எனப்படும்.
கருவூர்
- 552. சோழ மன்னர்களின் தலைநகரங்கள் ஐந்தனுள் ஒன்று.
தலவிசேடங் காண்க. (பக்கம் 768). இதன் ஆறு ஆகிய ஆம்பிரநதி என்பது
சங்க நூல்களில் வழங்கப்படும் ஆன் பொருனை என்பதன்
மரூஉ என்பர்.
கலயனார்
- 830. கலயர் 835, 848, 850, 852, 854, 856, 858, 865.
குங்குலியக்கலய நாயனார். அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவர்.
கலிகைமாநகர்
- 1096. இது தக்கோலம் என்றும், திரு ஊறல் என்றும்
வழங்கப்படும். தொண்டை நாட்டில் தேவாரம் பெற்ற தலங்களுள் ஒன்று.
(பக்கம் 1419)
|