xvii

கன்னிகாப்பு - 1152. காஞ்சிபுரத்தின் பல பெயர்களுள் ஒன்று.

காசிபகோத்திரம் - 1215. விசாரசருமனார் (சண்டீசநாயனார்)
அவதரித்த கோத்திரம்.

காஞ்சி - 1125. காஞ்சிபுரம். தலவிசேடம் - பக்கம் - 1537 - பார்க்க.
இது காஞ்சிபுரத்தில் ஒரு ஆற்றுக்கும் பெயராய்வழங்கும். காஞ்சியாந் திரு
நதி 1152.

காஞ்சித்தானம் - 1152. காஞ்சிபுரத்திலுள்ள அற்புதத் தானங்களுள்
ஒன்று.

காப்புடைத் தீர்த்தம் - 1155. காஞ்சிபுரத்தில் உள்ள சுர ரட்சிதம்
என்னும் புண்ணிய தீர்த்தம்.

காரி - 1159. ஐயனார்; அரிகரபுத்திரர் என்ப. "செண்டுகையேந்தி
வித்தகக்கரி மேற் கொளும் காரி." இவர் வரலாறு கந்தபுராணத்தினுட் காண்க.
அசுரகாண்டம் - மகாசாத்தாப் படலம் - 50 பார்க்க.

குலோத்துங்கச் சோழன் - 1213. அநபாயச்சோழரின் பெயர்.

குறிஞ்சியாழ் - 1087. குறிஞ்சி நிலத்துக்குரிய யாழ் வகை.

சதமகனகரம் - 553. தேவேந்திரனது தலைநகர்.

சாருவ தீர்த்தம் - 1155. காஞ்சிபுரத்தில் உள்ள புண்ணிய
தீர்த்தங்களுள் ஒன்று.

சிவகாமியாண்டார் - 558, 590. ஆனிலையடிகளார்க்குத் திண்ணிய
அன்பு கூர்ந்த புண்ணிய முனிவர். அப்பெருமானுக்கு நாணாளும்
அதிகாலையில் முறைப்படி பூப்பறித்து அலங்கல் சாத்தி நியதிதவறாது
ஒழுகுபவர். இவரது திருத்தொண்டினை முன்னிலையாக் கொண்டு எறிபத்த
நாயனார் சரிதம் நிகழ்ந்தது. சிவகாமியார் - 563, 600, 604.

சிவபெருமான் - முதற்பகுதி - பெயர்விளக்கம்
பார்க்க. மழவிடையுடையான் 551; பொருட்டிருமறை கடந்த புனிதர் 556;
இருட்கடுவொடுங்கு கண்டத்திறையவர் 556; அழலவிர்சடையான் 557;
ஆனிலையடிகளார் 558; (களியானையினீருரியாய்! 566; எளியார்
வலியா மிறைவா! 566; அளியாரடியாரறிவே! 566; தெளிவாரமுதே! 566;
வேறுண்ணினைவார் புரம் வெந்தவியச் சீறும் சிலையாய்! 567;மறலிக் கிறைநீள்
செஞ்சே வடியாய்! 568) நெடியோ னறியா நெறியார் 569; மன்றவர் 570;
எந்தையார் 571, 822, 1160; அண்ணல் 573; மன்றுளென்று நிருத்தமே புரியும்
வெள்ளிக் குன்றவர் 585; குழையணிகாதினான் 587; அம்பலவாணர் 588;
வானவரீசர் 590; பன்னகாபரணர் 590; அங்கணர் 592, 753; களமணிகளத்துச்
செய்ய கண்ணுதல் 597; திங்கட்கொழுந்தணி வேணிக்கூத்தர் 598; அருமறைப்
பொருளாயுள்ளார் 600; பொன்னெடும் பொதுவி லாட னீடிய புனிதர் 603;
தம்பிரான் 604, 809, 921, 986, 1148; அம்பல நிறைந்தார் 604; கொற்றவர் 605;
நம்பர் 606, 847, 1263; தேனாருந் தண்பூங் கொன்றைச் செஞ்சடையவர் 607;
வானாளுந் தேவர்போற்று மன்றுளார் 607; தாளுந் தடமுடியுங் காணாதார் 611;
நஞ்சணிகண்டர் 633; அண்டர்பிரான் 645, 1261; மின்னின்ற செஞ்சடையார்
647; பொற்றொடியாள் பாகனார் 648; உம்பர்பிரான் காளத்தி உத்தமர் 649;
திருக்காளத்தி மன்னனார் 830; கங்கைவாழ் சடையார் 830 - எறிநீர்க் கங்கை
தோய்ந்தநீள் சடையார் - கூற்றைக் காய்ந்த சேவடியார் 831; பெருநதியணியும்
வேணிப்பிரான் 835; காலனாருயிர் செற்றார் 836; கங்கைநீர் கலிக்குஞ்
சென்னிக் கண்ணுதல் 837; தங்கணாயகர் 837; ஆறுசெஞ்சடைமேல் வைத்த
அங்கணர் 843; விடையவர் 843; என்னையுடையவர் - எம்மையாளு
மொருவர்; சடையவர் 843; 1263; நாதன் 845; எம்பிரான் 846; காலனைக்
காய்ந்த காலனார் 847; கங்கை அலைபுனற் சென்னியார் 848; அல்லொத்த
கண்டனெம்மான் 849;