| சொல்லான்காண் சுடர்மூன்று மாயி னான்காண். தொண்டாகிப் பணிவார்க்குத் தொல்வா னீய வல்லான்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே. 1 |
திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- வலி வலத்திறைவர் நல்லவர்; நான் மறை முதலியவைகளான தன்மையர்; அவர் என் மனத்துளார். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) நம்பன் - விரும்பப்படுவன். சுடர்மூன்றும் - சோம சூரியாக்கினிகள்; - (2) பார்த்தன் - அருச்சுனன்; -(3) ஏய் - இசை. எல்லார்க்கும் இயல்பானான் காண் - எல்லா உயிர்களுக்கும் அருள் செய்வதற்குச் சலமிலனாய்ப் பொதுவாக நின்றவன். "ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான்" (திருவாசகம்). அகம் வாயவன் - "நோவுளாா வாயுளான்" (பிள் - தே); -(4) பொழில் ஏழும் - ஏழு உலகத்தையும்; -(4) கூற்று - சொல். மாற்றவன் - மாற்றினவன்; அழித்தவன்; -(5) தோற்று - படைப்பு. கறுத்தவன் - வெகுண்டவன்; -(6) கழிந்தோர் - பற்றாற்றோர்; -(7) அடியார்க்கு அணியவன் அண்டத்தார்க்குச் சேயவன் என நிரனிறையாகப் பொருள் கொள்க. அணியவன் - அருகிருப்போன். சேயவன் - தூரத்திருப்பவன். உரும் - இடி; -(9) நெதி நியதி; ஊழ்; -(10) தம்கை வைத்த சென்னியர் - சென்னியில தம் கைவைத்துத் தொழுதவர்கள் திருக்கீழ்வேளூர் திருச்சிற்றம்பலம் | திருத்தாண்டகம் |
| ஆளான வடியவர்கட் கன்பன் தன்னை ஆனஞ்சு மாடியைநா னபயம் புக்க தாளானைத் தன்னொப்பா ரில்லை தானைச் சந்தனமுங் குங்குமமுஞ் சாந்துந் தோய்ந்த தோளானைத் தோளாத முத்தொப் பானைத் தூவெளுத்த கோவணத்தை அரையி லார்த்த கீளானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 1 |
திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- கீழ்வேளூரில் எழுந்தருளியுள்ள கேடிலியப்பரை அடைந்தவர்களே யாண்டும் கேடிலார். பதிகப பாட்டுக் குறிப்பு :- (1) ஆளான அடியவர் - தற்போதம் கைவிட்ட தொண்டர்கள். கீளானை - கோவணமும் கீளும் அரையில் ஆர்த்தவன என்க; -(2) சொற்பாவும பொருள் - சொல்லிற் பொதிந்த பொருள். வாங்காதான் - களையாதவன். வாங்குதல் - களைதல்; முள்வாங்கி என்றாற்போல;-(3) அளைவாயில் - பொந்தினை. உறைவிடமாகக் கொண்ட. இது சாதியடை. விளைவான் - விளைவிப்பவன். எத்தனையும் உளைவான் - பத்தர் செய்யும் பத்தியின் அவாவுக்கு ஏற்ப இரங்குபவன். கிளைவான் - அகழ்ந்து நீக்குபவன்; - மாவிரதம் - மாவிரத சமய வேடம். கோள் - கிரகங்கள். நாள் - நட்சத்திரங்கள். கொடு நரகக் |