32குறிப்புக்கள்

 

குழியில் நின்றால் மீட்பானை என்றது = நில்லாமையே உறுதியென்று குறித்ததாகும். வித்துரு(மம்) - பவளம்; -(5) நால்வேதத்து ஆறங்கச் சொல் நணுக மாட்டா தானை என விகுதி மாற்றுக; (6) கங்கை சுழித்தானை - கங்கையைச் சடையில் வளைத்தவனை. சுழித்தல் - வளைத்தல். முன்வேனில் - இளவேனில் - வசந்தகாலம். அதற்குரியவன் காமன்;-(7) உளர் ஒளி - எங்கும் சுழலும் (நிறைந்த) பேரொளி. உளர்தல் - சுழலல்; -(9) அசங்கையன் - ஐயுறத்தாகதவன்; பெருமையால் அளவற்றவன்;-(10) கிறிப்பான் - வஞ்சிப்பான்.

திருக்கன்றாப்பூர்

திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

மாதினையோர் கூறுகந்தாய் மறைகொணாவா
         மதிசூடி வானவர்க டங்கட் கெல்லாம்
நாதனே யென்றென்று பரவி நாளு
         நைந்துருகி வஞ்சகமற் றன்பு கூர்ந்து
வாதனையான் முப்பொழுதும் பூநீர் கொண்டு
         வைகன் மறவாது வாழ்த்தி யேத்திக்
காதன்மையாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

1

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- கன்றாப்பூர் இறைவனை மெய்யடியார் சிந்தையிலே காணலாம்.

பதிகப் குறிப்பு:- (1) வாதனை - முற்பிறவியிற் செய்ததால் வந்த பழக்கம். "அறமும் அறமுடையார்க்காகும்" (குறள்.);-(2) தற்று - இறுக எடுத்து; -(3) எவர்தாம் ஏனும் ஆக - குலம, குணம், ஒழுக்கம் முதலியன உடையவரோ, இல்லாதவரோ யாரேனுமாக. இலாடம் - நெற்றி. உவராதே - வெறுக்காமல். இவர் தேவர் அவர் தேவர் - இவர் என்பது அடியாரையும் அவா என்பது இறைவனையும் குறித்தது. இரண்டாட்டாது - அடியவர்க்கும் இறைவனுக்கும் வேற்றுமை கருதாமல். கவாராதே - வேற்றுமை கொள்ளாமல்; ஐயுறாமில்;-(4) இலம் - வறியாராயிருக்கின்றோம். காலம் செல்லா நாள் காலமோ - பஞ்ச காலம். இடையறாமல் - அஞ்சாமல். நெறி நின்று விளங்காமல் - அறநெறியை விட்டு விலகாமல்; - (5) விருத்தன் - மேன்மையாளன்; -(6) பொசி - புசிப்பு உணவு. நிலாசும் - நிலைபெறும்; வசியினால் - வசியச் செயல்களால்; (7) ஐ - கோழை;- (8) திருதிமை - திடம்; உறுதி; - (10) தனஞ்சயன் - அருச்சுனன். தசக்கிரிவன் - இராவணன். முரண் - வலிமை.

பக்கம் - 387. (1) ஆராத - தெவிட்டாத எனலுமாம். (2) சாமம்போல் - இராவைப்போன்ற.

பக்கம் - 388. (5) கடுஞ்சினத்தோன் - சலந்தரன். "சலமேவு சலந்தரன்" (நம்பி - தேவா). - (9) பானவன் - பாவினவன்.

பக்கம் - 402. (5) ஆர்த்து ஆர் உயிர்களைச் சுடும் - ஆரவாரித்து அருமையான உயிர்களைக் கொல்லும். அந்தகன் தன் உடல்போர்த்தார் - அந்தகாசுரன் உடலைச் சூலத்தால் பெயர்த்தவர் எனலுமாம்.